Published:Updated:

நீலகிரி: அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளருக்கு கொரோனா; கல்லூரிக்கு விடுமுறை அறிவித்த நிர்வாகம்

ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து 9 முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் கலோரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்து பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ooty arts college
ooty arts college
கொரோனா பரவல் அச்சம்... திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல மீண்டும் தடை!

3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயிலும் ஊட்டியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி வணிகவியல் பிரிவில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, கல்லூரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் பணியாற்றும் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேபோன்று ஊட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த பள்ளி மூடப்பட்டு, அந்த மாணவர் பயின்ற வகுப்பறையில் உள்ள மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ooty arts college
ooty arts college

கல்வி நிலையங்களில் பரவும் கொரோன பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய கல்வித்துறை அதிகாரி ஒருவர்,"நீலகிரியில் தற்போதுவரை மாணவர்கள் ஆசிரியர்கள் என சுமார் 20 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது போன்று பாதிப்பு ஏற்படும் பள்ளிகள் மூன்று முதல் ஐந்து நாட்கள் மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பரவாமல் கண்காணித்து வருகிறோம்"என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு