Published:Updated:

`மருத்துவர்கள் இணைந்து செய்த சாதனை!' சிவகங்கை மாவட்டத்தை அசர வைத்த மரம் நடு விழா

மாவட்ட ஆட்சியர்

மருத்துவர்கள் என்றால் மருத்துவம் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்ட நேரமில்லை என்பார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு, ஆனால் அதை மாற்றி காட்டியிருக்கிறார்கள் காரைக்குடி மருத்துவர்கள்.

`மருத்துவர்கள் இணைந்து செய்த சாதனை!' சிவகங்கை மாவட்டத்தை அசர வைத்த மரம் நடு விழா

மருத்துவர்கள் என்றால் மருத்துவம் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்ட நேரமில்லை என்பார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு, ஆனால் அதை மாற்றி காட்டியிருக்கிறார்கள் காரைக்குடி மருத்துவர்கள்.

Published:Updated:
மாவட்ட ஆட்சியர்

மருத்துவர்கள் என்றால் மருத்துவம் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்ட நேரமில்லை என்பார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு, ஆனால் அதை மாற்றி காட்டியிருக்கிறார்கள் காரைக்குடி மருத்துவர்கள். காரைக்குடியில் செயல்படும் இந்திய மருத்துவ சங்கம் 112 மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. இந்தச் சங்கம் `சிவகங்கை பசுமைத் திருவிழா 2022' என்ற பெயரில் ஒரு பெரிய ‘மெகா‘ மரம் நடு விழாவை நடத்திக் காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் சிவகங்கை மாவட்டத்தை இடம்பெற முயற்சி மேற்கொண்டுள்ளது. ஐம்பதாயிரம் மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற இமாலய இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பசுமை திருவிழா 50,000 மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்தது, அதில் 14/10/2022 அன்று காலை 11 மணி அளவில் 20 நிமிடங்களில் 25350 மரக்கன்றுகளை நட்டு சாதனைப் புத்தகத்தில் சிவகங்கை மாவட்டத்தை இடம்பெறச் செய்துள்ளது பாராட்டுக்குரியது.

காளையார்கோவிலில் தொடங்கிய நிகழ்ச்சி
காளையார்கோவிலில் தொடங்கிய நிகழ்ச்சி

எப்படி சாத்தியமானது இந்த மாபெரும் சாதனை?

இது பற்றி காரைக்குடி இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த உறுப்பினர் மற்றும்மா வட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் மணிவண்ணன் கூறும்போது “ பல்வேறு பொதுநல சேவைகளை நாங்கள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கி செய்து வருகிறோம். உதாரணமாக 2017 ம் ஆண்டு காரைக்குடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 63 ஏக்கர் பரப்பளவு கொண்ட `அதலைக்கண்மா'யைத் தூர்வாரும் மிகப்பெரிய திட்டத்தை இங்குள்ள மருத்துவர்கள், பொதுமக்கள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூர்வாரி அதை முறைப்படுத்தினேன். 1988 ல்கொண்டுவரப்பட்ட தேசியவனக்கொள்கை” யின் படி ஒரு மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 33% பசுமைப் போர்வை இருக்கவேண்டும்.

நமது மாநிலத்தில் 23.98 சதவிகிதம் தான் பசுமை போர்வை இருக்கிறது. அதிலும் சிவகங்கை மாவட்டம் 8 சதவிகிதம் பசுமை போர்வை மட்டுமே கொண்டுள்ளது. நமது மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கு முயற்சிகளை மாவட்ட கிரீன் கமிட்டி கூட்டத்தில் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மதுசூதன ரெட்டி வலியுறுத்திவந்தார்.

மாவட்ட ஆட்சியர்  திருப்பத்தூரில் தொடங்கி வைத்த நிகழ்வு
மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூரில் தொடங்கி வைத்த நிகழ்வு

இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய நிர்வாகிகளான இளம் மருத்துவர்கள் டாக்டர் குமரேசன், டாக்டர் சந்திரமோகன், டாக்டர் பாலாஜி 50,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முன் வைத்தனர். சற்று மலைப்பாக இருந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்லூரிகளின் உதவியால் இது சாத்தியமாகி இருக்கிறது. எங்களது மருத்துவர் சங்கத்தின் சார்பாக எனக்கு மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு தரப்பட்டது. அதை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையுடன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன்” என்றார்.

பறை இசை  முழங்க பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது
பறை இசை முழங்க பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது

டாக்டர் குமரேசன் அவர்கள் கூறும் போது ``இந்த மாபெரும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் போது `புத்தகத் திருவிழாவை போல் வருடம் தோறும் இந்த `பசுமை திருவிழா' நடத்தப்பட வேண்டும் எனக் கூறி அதற்கு `பசுமை திருவிழா' எனப் பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என அழகிய தமிழ் பெயரை சூட்டி, மாவட்ட அரசு நிர்வாகம் `பசுமை திருவிழா' வுக்கு ஒத்துழைக்கும் வகையில் ‘திரு திருப்பதி ராஜன்’ [BDO] அவர்களைத் தனி அதிகாரியாக நியமித்து ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொரு நிகழ்வையும் மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன ரெட்டி அவர்கள் தன்னுடைய கவனத்துக்குக் கொண்டு வரச் சொல்லி நிகழ்வை மெருகேற்றிக் கொண்டு சென்றார். நாங்கள் சோர்ந்து போகும் நேரங்களில் எங்களை ஊக்கப்படுத்தி இந்த மாபெரும் சாதனைக்கு பெரும் உறுதுணையாக இருந்து பலமுறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தச் சாதனையை செய்தது நாங்கள் அல்ல எங்கள் மாவட்டஆட்சியர்தான்”என்றார்.

முன்னோடி திட்டமான இது எப்படி சாத்தியமாயிற்று??

முதலில் அம்பதாயிரம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, அந்த மரக்கன்றுகள் காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த நன்கொடையாளர்களிடம் பணமாகவோ அல்லது மரக்கன்றுகளாகவோ பெறப்பட்டன. இந்தப் பொறுப்பை டாக்டர் திருப்பதி அவர்கள் தலைமையிலான குழு திறம்பட செய்து கொண்டு இருந்தது. இரண்டு மாதங்களாக இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டே இருந்தன, சிறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்கும் பழ மரங்கள் மற்றும் நமது நாட்டின் மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அயல் மரங்கள் முடிந்த அளவு தவிர்க்கப்பட்டன. மரக்கன்றுகள் ஓரிடத்தில் சேர்க்கப்பட்டன. பிறகு மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் பள்ளி கல்லூரிகளில் தொடர்பு கொண்டு ‘எவ்வளவு கன்றுகள் உங்கள் கல்லூரிக்கு பள்ளிக்கு தேவை’ என்பதை பட்டியல் தரச் சொல்லி உத்தரவிட்டார். அதன்படி உருவானது பட்டியல். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் “ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட “ பணியாளர்கள் மூலம் மரங்கள் வைப்பதற்கு குழி தோண்டப்பட்டது பிறகு மழை பெய்தால் அந்த நேரத்தில் நடலாம் என முடிவு செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழை மழைக்காலமும் வந்தது. இறுதியில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு அப்பாவு, அமைச்சர் பெரிய கருப்பன் காளையார் கோவிலில் அரசுப் பள்ளியில் திட்டத்தை முன்னெடுக்க மரக்கன்றுகளை நட்டனர்.

மரக்கன்றுகளுடன் குழந்தைகள்
மரக்கன்றுகளுடன் குழந்தைகள்

சிவகங்கை சீமையின் வர்த்தக பூமியான காரைக்குடியில் ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் நிமிர்வு கலையகத்தின் இளம் சிறார்களைக் கொண்ட பறை இசை குழுவினர் பறை ஒலி முழங்க ‘நேதாஜி சிலம்பாட்ட’ குழுவினர் சிலம்பம் ஆட பள்ளி கல்லூரிகளுக்குக் கன்றுகள் அனுப்பும் பணியைத் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன ரெட்டி. அன்றிலிருந்து நான்கு நாட்கள் காரைக்குடியின் பேருந்து நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு மாவட்டத்தின் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் விஐபிகளைக் கொண்டு பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தினமும் மாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை டாக்டர் காமாட்சி சந்திரன் தலைமையிலான குழு ஒருங்கிணைத்தது. ஒவ்வொரு பள்ளிக்கும் கல்லூரிக்கும் கிராமங்களுக்கும் மரக்கன்றுகள் அனுப்பப்பட்டு கொண்டே இருந்தன. எல்லா இடங்களிலும் மரக்கன்றுகள் கொண்டு சேர்க்கப்பட்டதை டாக்டர் பாலாஜி தலைமையிலான குழு பார்வையிட்டு உறுதி செய்துகொண்டு இருந்தது.

பள்ளத்தூர் கல்லூரியில் மியாவாக்கி முறையில் நடப்பட்ட மரக்கன்றுகள்.
பள்ளத்தூர் கல்லூரியில் மியாவாக்கி முறையில் நடப்பட்ட மரக்கன்றுகள்.

இறுதி நாளும் வந்தது. விழாவின் முக்கிய நிரலே , ஒரே நேரத்தில் மரக்கன்றுகளை நட்டு அதை ஜிபிஎஸ் பதிவோடு குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்சப் அனுப்பச்செய்வதே. நிகழ்வு நடந்த நாள் அக்டோபர் 14 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டத்தின் மற்றொரு முக்கிய நகரமான திருப்பத்தூரில் பிரபல “ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில்” மரக்கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை நேரில் பார்த்து அடையாள மரக்கன்று ஒன்றை நட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார் மாவட்ட ஆட்சியர்.

பின் அங்கிருந்து அரை மணி நேரத்தில் காரைக்குடி வந்து அழகப்பா கல்லூரியில் 7500 மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தார். சிவகங்கை மாவட்டத்தின் கிராமங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் மக்களும் மாணவர்களும் தயார் நிலையில் நிற்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.லால்வேனா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மாங்குடி, மாணவர்களின் ஆரவாரத்துடன் இந்த பிரம்மாண்ட விழாவைத் தொடங்கி வைத்தனர்.

பள்ளத்தூர்  காலேஜ் மாணவிகள் பங்குபெற்ற நிகழ்வு .
பள்ளத்தூர் காலேஜ் மாணவிகள் பங்குபெற்ற நிகழ்வு .

சரியாக காலை 11 மணி முதல் 20 நிமிடங்களுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு நடப்பட்ட மரக்கன்றுக்கும் போட்டோவுடன் ஜிபிஎஸ் லொகேஷன் மற்றும் நேரம் குறிக்கப்பட்டு குறிப்பிட்ட நம்பருக்கு அனுப்பப்பட்டது 25, 350 மரக்கன்றுகள் இருபதே நிமிடங்களில் நட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “ பசுமை தமிழ்நாடு” அதற்காக அரசு வைத்திருக்கும் இலக்கு 265 கோடி மரக்கன்றுகள் அதுவும் பத்தே பத்து ஆண்டுகளில். தமிழக அரசின் ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்திற்கு வலு சேர்க்கும் சிவகங்கை மாவட்டத்தின் ‘பசுமை திருவிழா’ ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த மருத்துவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் மாமன்ற உறுப்பினர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் என அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது என்பது பெருமைக்குரிய விசயம். பசுமை திருவிழா மூலம் பசுமை தமிழ்நாடு கனவு நிறைவேறுமென்ற நம்பிக்கை சிவகங்கை மாவட்டத்தில் முதல் சுதந்திரத் தீ யைப் போல பற்றவைக்கப்பட்டுள்ளது.

`மருத்துவர்கள் இணைந்து செய்த சாதனை!' சிவகங்கை மாவட்டத்தை அசர வைத்த மரம் நடு விழா

திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய “பசுமை சாரம்” என்ற அமைப்பு இந்த நிகழ்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றது, அந்த அமைப்பில் உள்ள கல்லூரி மாணவர்கள் பசுமை திருவிழாவில் 2000 மரக்கன்றுகளைப் பெற்று தென்கரை என்ற கிராமத்தில் மரக்கன்றுகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்து மரம் நட வேண்டிய நேரம் ஜிபிஎஸ் இல் பதிவு செய்வது எப்படி என்பதை பற்றி விளக்கம் தந்தனர். அந்த மக்களும் ஆர்வமுடன் பங்கேற்று குறிப்பிட்ட நேரத்தில் மரத்தை நட்டு படத்துடன் அனுப்பி வைத்தது மெய்சிலிர்த்தது.

மாவட்டத்தின் சிறிய நகரமான பள்ளத்தூரில் செயல்படும் சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில் ‘மியா வாக்கி’ முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 800 மரக்கன்றுகளை நட்டனர். இதை ஒருங்கிணைத்த கல்லூரி பேராசிரியர் திருமதி ஆனந்த செல்வி கூறும் போது” எங்கள் கல்லூரி 14.10.2022 அன்று உண்மையில் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒரு டிபார்ட்மெண்டில் விழா என்றால் அந்த டிபார்ட்மெண்ட் மாணவியர் மட்டுமே விழா உற்சாகத்தில் இருப்பார்கள் ஆனால் இந்த மரம் நடு விழாவில் மொத்த கல்லூரியும் விழாக்கோலம் பூண்டு மரம் நட்டு முடித்தனர் . இவ்வளவு நெகிழ்வான நிகழ்வை எங்கள் கல்லூரியில் நான் கண்டது முதல் முறை” என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

- டாக்டர் மணிவண்ணன்