Published:Updated:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளைப் பிடித்து கார்த்திக் என்ற இளைஞர் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
News
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

முதலிடம் பெற்ற மாடுபிடிவீரர் கார்த்திக்குக்கு காரும், இரண்டாமிடம் பெற்ற முருகனுக்கு டூவீலரும், மூன்றாமிடம் பெற்ற பாரத்குமாருக்கு பசும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் உற்சாகமாக இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 24 காளைகளை பிடித்து முதலிடம் வந்த இளைஞர் கார்த்திக் கார் பரிசு பெற்றார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜல்லிட்டுத் திருவிழா பல ஊர்களில் நடந்தாலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் போட்டிகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று காலை அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டித் தொடங்கியது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் தொடங்கி வைத்தபோது
அமைச்சர்கள் தொடங்கி வைத்தபோது

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் காளைகள், மாடுபிடி வீரர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னே அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வெளியூரைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ரசிகர்கள் அதிகமாக வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7 சுற்றுகளாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 294 வீரர்கள் பங்கேற்றனர்.
வீரர்கள் உற்சாகமாக களமாடினார்கள். அவர்களுக்கு இணையாக காளைகளும் ஆட்டம் காட்டின.

ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் அவனியாபுரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கார்த்திக் 24 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கார் பரிசு பெற்ற கார்த்திக்
கார் பரிசு பெற்ற கார்த்திக்

19 காளைகளை பிடித்து வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் இரண்டாமிடம் வந்தார். 12 காளைகளை அடக்கி விளாங்குடி பாரத்குமார் மூன்றாமிடம் வந்தார்.

இதேபோல, சிறந்த காளையாக மனப்பாறையைச் சேர்ந்த தேவசகாயம் என்பவரின் காளை முதலிடமும், அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் காளை இரண்டாமிடமும், சேதுராமன் என்பவரின் காளை மூன்றாமிடமும் பிடித்தன.

சீறிப்பாய்ந்த காளையும் வீரரும்
சீறிப்பாய்ந்த காளையும் வீரரும்

இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 82 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காளை ஒன்று முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

24 காளைகளைப்  பிடித்த இளைஞர்
24 காளைகளைப் பிடித்த இளைஞர்

முதலிடம் பெற்ற மாடுபிடிவீரர் கார்த்திக்குக்கு காரும், இரண்டாமிடம் பெற்ற முருகனுக்கு டூவீலரும், மூன்றாமிடம் பெற்ற பாரத்குமாருக்கு பசும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பல்வேறு தரப்பினரால் தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருள்கள் வழங்கப்பட்டன.