Published:Updated:

லட்சம் கார்னேஷனில் வேளாண் பல்கலைக்கழகம்; 275 வகை பூக்கள்! ஊட்டி மலர்க் கண்காட்சி சிறப்புகள் என்ன?

Ooty flower show

சுமார் ஒரு லட்சம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கார்னேஷன் மலர்களைக் கொண்டு 75 அடி நீளம், 20 அடி உயரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாதிரியை மிக பிரமாண்டமாக வடிவமைத்துள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

லட்சம் கார்னேஷனில் வேளாண் பல்கலைக்கழகம்; 275 வகை பூக்கள்! ஊட்டி மலர்க் கண்காட்சி சிறப்புகள் என்ன?

சுமார் ஒரு லட்சம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கார்னேஷன் மலர்களைக் கொண்டு 75 அடி நீளம், 20 அடி உயரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாதிரியை மிக பிரமாண்டமாக வடிவமைத்துள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Published:Updated:
Ooty flower show

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நீலகிரியில் தற்போது கோடை விழா தொடங்கி களைகட்டி வருகிறது. கடந்த 7ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சியுடன் தொடங்கியது. கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது.

Ooty flower show
Ooty flower show

நூற்றாண்டைக் கடந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் 124வது மலர்க் கண்காட்சியைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த மலர்க்காட்சியில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு பல்வேறு சிறப்பு அலங்காரங்களை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிலும் குறிப்பாக சுமார் ஒரு லட்சம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கார்னேஷன் மலர்களைக் கொண்டு 75 அடி நீளம், 20 அடி உயரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாதிரியை மிக பிரமாண்டமாக வடிவமைத்துள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

Ooty flower show
Ooty flower show

இதுமட்டுமல்லாது நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடிகளான தோடர், கோத்தர், குறும்பர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் ஆகியோரது உருவங்களை மலர்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊட்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டு 200 ஆண்டுகள் எட்டியதைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான மலர்களில் ஊட்டி 200 என்ற வாசகத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். மேலும், முழுக்க முழுக்க பூக்களைக் கொண்டே நுழைவு வாயில்கள், அலங்கார வளைவுகள்,மஞ்சள் பை போன்றவையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தன.

Ooty flower show
Ooty flower show

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல மாதங்களாக சுமார் 35,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ரகங்களிலான மலர்ச் செடிகள் காட்சி மாடங்களை அலங்கரித்து வருகின்றன. ஹாலந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ட்யூலிப் மலர்களும் இடம்பெற்றுள்ளன.

124வது மலர்க் கண்காட்சி குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், "ஒரே இடத்தில் 275 வகை மலர்களைக் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தோட்டக்கலைத்துறையின் வளத்தைப் போற்றும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Ooty flower show
Ooty flower show

சிறப்பு மலர் அலங்காரத்துக்கு உள்ளூர் கொய்மலர் விவசாயிகளிடம் இருந்தும் கனிசமான அளவு கொய்மலர்களை விலை கொடுத்து வாங்கியுள்ளோம். 5 நாள்கள் நடைபெற இருக்கும் இந்தக் கண்காட்சியைப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism