Published:Updated:

ஊட்டி மலர் கண்காட்சி: 5 நாட்களில் ஒரு லட்சம் பயணிகள்; முதல் பரிசைத் தட்டிச் சென்ற ராணுவ மையம்!

ஊட்டி மலர் காண்காட்சி

தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சியின் நிறைவு விழா வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஊட்டி மலர் கண்காட்சி: 5 நாட்களில் ஒரு லட்சம் பயணிகள்; முதல் பரிசைத் தட்டிச் சென்ற ராணுவ மையம்!

தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சியின் நிறைவு விழா வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

Published:Updated:
ஊட்டி மலர் காண்காட்சி

இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஊட்டியில் நடைபெற்ற 124 வது மலர் கண்காட்சியைத் தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியில், ஒரே இடத்தில் 275 வகை மலர்களைக் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோட்டக்கலைத்துறையின் வளத்தைப் போற்றும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் சிறப்பு அலங்காரங்களை உருவாக்கியிருந்தனர்.

ஊட்டி மலர் காண்காட்சி
ஊட்டி மலர் காண்காட்சி

அதிலும் குறிப்பாக ஒரு லட்சம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கார்னேஷன் மலர்களைக் கொண்டு 75 அடி நீளம், 20 அடி உயரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாதிரியை மிக பிரமாண்டமாக வடிவமைத்திருந்தனர். மேலும், நீலகிரியில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடிகளின் உருவங்களை மலர்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். ஊட்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டு 200 ஆண்டுகள் எட்டியதைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான மலர்களில் 'ஊட்டி 200 ' என்ற வாசகத்தை உருவாக்கியிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வண்ணப் பூக்களில் அலங்கார நுழைவு வாயில்கள், அலங்கார வளைவுகள், மஞ்சள் பை போன்றவையும் இடம் பெற்றிருந்தன. அரசு தாவரவியல் பூங்காவில் பல மாதங்களாக சுமார் 35,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ரகங்களிலான மலர்ச் செடிகள் காட்சி மாடங்களை அலங்கரித்தன. ஹாலந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ட்யூலிப் மலர்களும் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர். மலர் கண்காட்சி நிறைவு விழா வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பாக பராமரிக்கப்பட்ட தனியார் பூங்காக்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊட்டி மலர் காண்காட்சி
ஊட்டி மலர் காண்காட்சி

124 வது மலர் கண்காட்சி நிறைவு விழா குறித்து நம்மிடம் பேசிய பூங்கா நிர்வாகத்தினர்," இந்த முறை ஊட்டி மலா் கண்காட்சியில் கலந்துகொண்ட போட்டியாளா்களுக்கு 49 சுழற்கோப்பைகள் உள்ளிட்ட 619 பாிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. முதல் பரிசான 'காா்டன் ஆஃப் தி இயர்' கவா்னா் சுழற்கோப்பை குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு வழங்கப்பட்டது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism