Published:Updated:

உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் சுகுணா; மறுவாழ்வுக்கு உதவிய ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சுகுணா

உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை பராமரிப்பதற்காக திருமணமே செய்துகொள்ளாமல் காப்பாற்றிவரும் சுகுணாவின் வலி நிறைந்த வாழ்க்கை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இதயத்தையும் உருக்கியிருக்கிறது. சுகுணா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து உரையாடியதோடு உதவியும் செய்திருக்கிறார்.

உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் சுகுணா; மறுவாழ்வுக்கு உதவிய ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை பராமரிப்பதற்காக திருமணமே செய்துகொள்ளாமல் காப்பாற்றிவரும் சுகுணாவின் வலி நிறைந்த வாழ்க்கை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இதயத்தையும் உருக்கியிருக்கிறது. சுகுணா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து உரையாடியதோடு உதவியும் செய்திருக்கிறார்.

Published:Updated:
சுகுணா
ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கலந்த சந்தோஷத்தில் இருக்கிறது சுகுணாவின் குடும்பம். உடன்பிறந்த ஐந்து மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை பராமரிப்பதற்காக திருமணமே செய்துகொள்ளாமல் 'குணவதியாய்' திகழும் சுகுணா குறித்து, கடந்த 29/06/2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் செய்தி வெளியானது. இதயத்தை உருக்கும் இவர்களின் வலி நிறைந்த வாழ்க்கை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இதயத்தையும் உருக்கியிருக்கிறது. சுகுணா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து உரையாடியதோடு உதவியும் செய்திருக்கிறார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுகுணாவுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் துணை ஊழியராக பணி ஆணையையும் ரூ. 20 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். அக்கம் பக்கத்தினரே எட்டிப்பார்க்காமல் நான்கு சுவற்றுக்குள் அடைந்துக்கிடக்கும் சுகுணா குடும்பத்தை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சந்திக்க வந்த ஆச்சர்யம் விலகாமல் நம்மிடம் பேசத்தொடங்கினார் சுகுணா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"நல்லாருக்கீங்களாம்மா"ன்னு நலம் விசாரிச்சுட்டு எங்களுக்கு உடல்ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் என்னென்ன கஷ்டங்கள் இருக்கு? ஹாஸ்பிட்டல் போய் ஏன் சரியாகலன்னு அக்கறையா கேட்டுக்கிட்டாரு. அதுமட்டுமில்ல, என் தம்பி, தங்கச்சிங்களோட தரையில உட்கார்ந்து பேச ஆர்மபிச்சிட்டார். இதை நினைச்சி எனக்கு இப்போவும் அழுகையா வருது. மாற்றுத்திறனாளிங்கங்குறதால வீட்டுக்கு யாருமே வரமாட்டாங்க. அவங்கப் பார்வையில நாங்க எப்படி இருக்கோம்னு தெரியலை. ஆனா, நாங்க சுத்தமாதான் இருக்கோம். அவங்க மனசுதான் அழுக்குபோல.

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

வெளிலிலருந்து யாராவது பேசிடமாட்டாங்களா... வந்துப் பார்த்துடமாட்டாங்களான்னு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சிக் கிடக்கிற என் தம்பி, தங்கச்சிங்களுக்கு சார் பேசினது பெரிய சந்தோஷம். எங்கத் தெருவே திருவிழா போல வேடிக்கைப் பார்த்துச்சி. ராதாகிருஷ்ணன் சார் மக்கள் நலன் மீது அக்கறைக் கொண்டவர்னு எல்லோரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ நேர்லயும் பார்த்துட்டேன். வேலைக்குப்போனா கிடைக்குற பத்தாயிரம் சம்பளம் எங்களை மட்டுமில்ல. என் தங்கச்சிப் பிள்ளைங்களையும் படிக்க வைக்க உதவியா இருக்கும்" என்று நெகிழ்கிறார் சுகுணா.