Published:Updated:

கரை புரளும் வெள்ளம்; பெயர்ந்து விழும் மரங்கள்... முகாம்களில் மக்கள்! - என்ன நடக்கிறது நீலகிரியில்?

என்ன நடக்கிறது நீலகிரியில்?

ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இடை விடாத பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அணைகளும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன.

கரை புரளும் வெள்ளம்; பெயர்ந்து விழும் மரங்கள்... முகாம்களில் மக்கள்! - என்ன நடக்கிறது நீலகிரியில்?

ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இடை விடாத பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அணைகளும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன.

Published:Updated:
என்ன நடக்கிறது நீலகிரியில்?

நடப்பு ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை நீலகிரியில் தாமதமாக தொடங்கினாலும், அதிதீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இடை விடாத பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அணைகளும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன. மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெல்ல நீர் கரை புரண்டு பாய்கிறது. ஆற்றைக் கடக்க பயன்படுத்தப்பட்டுவந்த தெப்பக்காடு பாலம் நீரில் மூழ்கியிருப்பதால் மக்கள் ஆற்றைக் கடக்க ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். முழு கொள்ளளவை எட்டிய குந்தா, கெத்தை ஆகிய அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர் அதிகாரிகள். பெரும்பாலான பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

 மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

ஊட்டி நகரின் மையப்பகுதியான ஏ.டி.சி பகுதியில் சாலையில் ராட்சத யூக்கலிப்டஸ் மரம் விழுந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டி எடக்காடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. கூடலூர் செம்பாலா பகுதியில் சாலையோர தடுப்புச் சுவர் ஒன்று குடியிருப்பின் பின்புறம் இடிந்து விழுந்தது. மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்திருக்கின்றனர் அரசு அதிகாரிகள். மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டும், நிவாரண உதவிகளை வழங்கியும் வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாட்ட ஆட்சியர் அம்ரித், ``கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஊட்டியில் நேற்று இரண்டு வாகனங்கள்மீது மரங்கள் விழுந்தன. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். எனவே, பொதுமக்கள் யாரும் மரங்களின் அடியில் நிற்க வேண்டாம். மேலும், வாகனங்களையும் நிறுத்த வேண்டாம். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

 மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டி, கூடலூர் சாலையோரங்களில் உள்ள மரங்கள் மட்டுமின்றி, கோத்தகிரி செல்லும் சாலைகளிலும் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடலூர் பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஊட்டி, கூடலூரில் சில குடும்பங்களை முகாம்களில் தங்க வைத்திருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்றார்.