Published:Updated:

`தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை மாற வேண்டும்' - சென்னையில் நடந்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்

இந்தியாவில் தூய்மைப் பணி மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் தலித் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவில் மெத்தனப்போக்கை மேற்கொண்டு புறக்கணிப்பு செய்துள்ளனர்.

`தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை மாற வேண்டும்' - சென்னையில் நடந்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

இந்தியாவில் தூய்மைப் பணி மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் தலித் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவில் மெத்தனப்போக்கை மேற்கொண்டு புறக்கணிப்பு செய்துள்ளனர்.

Published:Updated:
தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் (SASY) 'தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் மனிதக் கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013'-ன் நிலையை குறித்து தாங்கள் செய்த ஆராய்ச்சியின் ஆய்வறிக்கை மற்றும் இச்சட்டம் குறித்தான கையேட்டினை வெளியிட்டிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து 'மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 ‘சட்டத்தின் அமலாக்கமும், சவால்களும் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய செயல் திட்டம்' என்னும் தலைப்பில் கலந்துரையாடலையும் சென்னையில் நடத்தியது. இந்நிகழ்வில் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்
ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்

புது டெல்லி சபாய்கரம்சேரி அந்தோலன் அமைப்பின் தேசிய இணை அமைப்பாளர் தீப்தி சுகுமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, விட்னஸ் திரைப்படத்தின் இயக்குனர் தீபக், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் போன்றோர் ஆய்வறிக்கையை வெளியிட்டு தங்கள் கருத்துரைளை வழங்கினர். அவர்களின் முன்னிலையில் இந்த ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியை எஸ். கல்யாணி ஆய்வறிக்கையை குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து இச்சட்டத்தின் அமலாக்கமும் சவால்களும் எதிர்கொள்ள வேண்டிய செயல்திட்டமும் எனும் தலைப்பில் விழுதுகள் அமைப்பின் தலைவர் மா.தங்கவேல் அவர்களின் தலைமையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.

ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்
ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்

அவர்கள் கடந்த ‘ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022’ இதற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த கழிவு நீர் தொட்டிகளில் விஷவாயு தாக்கி இறந்த சம்பவங்கள், பள்ளிகளில் அருந்ததியர் மாணவர்கள் கழிவறை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீதான வன்கொடுமைகள் போன்றவற்றை உள்ளடக்கிய 21 சம்பவங்களை நேரடியாக கள ஆய்வு செய்து அவற்றில் இச்சட்டம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், "இந்தியாவில் தூய்மை மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் தலித் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் பெருமளவில் மெத்தனப்போக்கை மேற்கொண்டு புறக்கணிப்பு செய்துள்ளனர். 95% தூய்மை பணிகளில் ஈடுபடுபவர்கள் தலித்துகள் என்றும் அதில் 99% பேர் தலித் பெண்கள் என்றும் மேலும் அவர்களுக்கு நிரந்தர பணிகளை வழங்காமல் பல அச்சுறுத்தல்களின் கீழ் தினசரி ஊதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் சுரண்டப்படுகின்றனர்". 

எஸ்.எஸ்.பாலாஜி
எஸ்.எஸ்.பாலாஜி

தொடர்ந்து "பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அளவில் கூடும் இடங்களில் திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதுபோன்று திறந்த வெளியில் மலம் கழிக்கப்படும் போதெல்லாம் அவற்றை தூய்மை பணியாளர்கள் தங்கள் கைகளால் அகற்றும் அவலநிலையும் உள்ளது. பொதுவாக கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்பவர்களுக்கு 58 வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை நிகழ்ந்த எந்த மலக்குழி மரணங்களிலும் இதுபோன்ற எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.21 சம்பவங்களில் நான்கு அரசு பள்ளிகளில் அருந்ததியர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டவை. 21ல் வெறும் ஆறு சம்பவங்களில் மட்டும் தான் இச்சட்டத்தின் கீழ் FIR பதியப்பட்டுள்ளது மேலும் இதில் ஏழு வழக்குகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் சமாதானம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த வழக்குகளில் ஒன்றில் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை" என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்
ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்

இந்நிகழ்வில் பேசிய பலரும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற தொழில்களின் மூலம் சாதிய கட்டமைப்பு இவர்களை வஞ்சிக்கின்றது என தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். 

"தொடர்ச்சியாக ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 426 மரணங்கள் இதன் மூலமாக நிகழ்ந்துள்ளது. எப்படி வன்கொடுமையின் மூலம் ஏற்படுகின்ற மரணங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு கணக்கிடப்படுகின்றதோ அதுபோலவே இதுபோன்ற மலக்குழி மரணங்களும் கணக்கிடப்படுகின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதிலே ஈடுபடக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கான மறுவாழ்விற்கு இன்னும் அதிதீவிரமான நடவடிக்கைகள் தேவை என்பதை இந்த ஆய்வு அறிக்கை எடுத்துரைக்கிறது.

ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்
ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்,பாலாஜி செய்தியாளர் சந்திப்பில், இந்த ஆய்வறிக்கையின் பரிந்துரைகளையும் அது எடுத்துரைக்கவும்  முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு விடுதலை சிறுத்தைகளின் தலைவர் வாயிலாகக் கொண்டு செல்லப்படும். புதுக்கோட்டையில் நடைபெற்ற மிகக் கொடூரமான செயலைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகளின் சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆரூர் ஷா நவாஸ் அவர்களுடன் இணைந்து நானும் அந்த இடத்தை ஆய்வு செய்தேன்.

அப்போது குடிநீர் கொண்டு வருவதற்கான அந்த சோர்ஸ் வேறொரு தொட்டியாக இருந்தாலும் கூட பழைய குழாய்களின் வழியாகவே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் அதனைப் பயன்படுத்தாமல் பணம் கொடுத்து நீர் வாங்கிக் குடிக்கும் அவலநிலை இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அதனை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பின் இன்றைக்கு அந்த குடிநீர் வழங்கக்கூடிய குழாய் மாற்றப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் தீபக்
ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் தீபக்

தற்போது தமிழகத்தில் சாதிய சக்திகள் வெகு தீவிரமாக செயல்படக்கூடிய நிலை குறிப்பாக பாஜக செயல்படக்கூடிய இச்சூழலில் இந்நிகழ்வில் அவர்களுடைய பங்கு இருக்கின்றது என்கிற கோணத்திலும் தமிழக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இதுபோன்ற மலக்குழி மரணங்களைப் பொறுத்தவரையில் சரியான சட்டங்கள் இருக்கின்றன. அதற்காக முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலே இது முழுவதும் ஒழிக்கப்படும் ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் தான் பெரும் தொய்வு இருக்கிறது. இந்த சட்டங்களை செயல்படுத்துவது என்பது பாதிக்கப்பட்டவர்களிடம் இல்லாமல் அரசு அதிகாரிகளிடம்தான் இருக்கின்றது. அதனை மாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில்தான் நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். இது போல இருக்கின்ற சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தினாலே போதும் அது முழுமையாகச் சரியாகிவிடும். " என்றார்.

ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்
ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில்

தொடர்ந்து பேசிய கல்லூரி மாணவி அபர்ணா "நாங்கள் இங்கு வந்ததற்கு முக்கிய காரணமே மனித கழிவுகளை கையால் அல்லும் மக்களின் மனித உரிமைகளை குறித்து தெரிந்து கொள்வதற்காகத்தான். அதற்கு முறையான சட்டங்கள் இருந்தும் அது ஏன் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? என்ற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டேதான் இருந்தது. தமிழக அரசு இந்த பிரச்னை இல்லை என்று கூறிக் கொண்டாலும் இன்னும் மலக்குழி மரணங்கள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இதற்கு எதிரான சரியான சட்டங்கள் இருந்தாலும் அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த பிரச்னைக்கு எதிராக எந்தெந்த சட்டங்கள் எல்லாம் இருக்கின்றது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தெல்லாம் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் இந்த மக்கள் எந்தெந்த மாதிரியான கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கான கையுறை உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பதேயே இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். மேலும், ஏன் அவர்களுக்கு இந்தப் பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை என்றும் இதுபோன்ற சட்டங்களின் மூலமாக அவர்களின் உரிமைகளை எவ்வாறு பெற்றுத் தரலாம் என்றும் அறிந்து கொண்டேன்" என்றார்.