Published:Updated:

பிரின்ஸ் ஜூவல்லரி: GJEPC-யின் தென் மண்டல தலைவராக திரு. பிரின்ஸ்சன் ஜோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

பிரின்ஸ் ஜூவல்லரி:

பிரின்ஸ் ஜூவல்லரியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.பிரின்சன் ஜோஸ், ஜெம் அன்ட் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (GJEPC) தென் மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரின்ஸ் ஜூவல்லரி: GJEPC-யின் தென் மண்டல தலைவராக திரு. பிரின்ஸ்சன் ஜோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

பிரின்ஸ் ஜூவல்லரியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.பிரின்சன் ஜோஸ், ஜெம் அன்ட் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (GJEPC) தென் மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Published:Updated:
பிரின்ஸ் ஜூவல்லரி:

பிரின்ஸ் ஜூவல்லரியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.பிரின்சன் ஜோஸ், ஜெம் அன்ட் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (GJEPC) தென் மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். GJEPC இல் 2022 - 2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தேர்தல் குழுவில், திரு. பிரின்ஸ்சன் ஜோஸ் இந்த மதிப்புமிக்க பதவியில் 5 வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டல தலைவரின் அலுவலகம் – GJEPC வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது.. மண்டல தலைவராக, திரு. பிரின்ஸ்சன் ஜோஸ், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசங்களில் (அந்தமான் & நிக்கோபார் தீவு, லட்சத்தீவு மற்றும் பாண்டிச்சேரி) ஆகிய 8 தென் மாநிலங்களில் GJEPC ஐ அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்துவார். 2006-2015 கால கட்டத்தில் அவர் இதே பதவியில் இருந்தபோது, ​​தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களுடன் சென்னையில் முதல் முறையாக வாடிக்கையாளர்-விற்பனையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.

பிரின்ஸ் ஜூவல்லரி:
பிரின்ஸ் ஜூவல்லரி:

புதிய பதவி குறித்து, திரு. பிரின்ஸ்சன் ஜோஸ் கூறுகையில், “GJEPC இன் தென் மண்டல தலைவராக பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு பாக்கியம். நமது நாட்டில் தங்கம் நுகர்வில் பெரும்பாலானவை தெற்கு பகுதியை கொண்டுள்ளதால், எனது பதவிக்காலத்தில் இப்பகுதியில் ஜெம் அன்ட் ஜூவல்லரி வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த நான் உறுதிபூண்டுள்ளேன். இந்த மண்டலத்தில் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு உகந்த கொள்கை சீர்திருத்தங்களை கொண்டு வர தொழில்துறை மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவேன். தங்கம் தவிர, ஆய்வகத்தில் வளரும் வைரங்களில் அற்புதமான புதிய கண்டுபிடிப்புகள் நடப்பதை காணும் நேரத்தில், இயற்கை வைர சந்தையில் நுழைவதற்கான அபரிமிதமான சாத்தியங்களும் உள்ளன. எனது பதவி காலத்தில் எனது முக்கிய பொறுப்புகள், GJEPC -யின் ‘விஷன் - இந்தியாவை தரமான ஜெம் அன்ட் ஜூவல்லரிகளுக்கு விருப்பமான ஆதாரமாக மாற்றுவது’ மற்றும் மிஷன் - இந்திய ஜெம் அன்ட் ஜூவல்லரி துறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரும் தங்கள் முழு திறனையும் அடைய செய்வது ” என்று அவர் கூறினார்.

பிரின்சன் ஜோஸ் 89 ஆண்டுகளுக்கும் மேலான நகை வர்த்தகத்தில் புகழ்பெற்ற பரம்பரையின் குடும்பத்தை சேர்ந்தவர். 1983 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய பிரின்ஸ் ஜூவல்லரி, நகைகளில் விருது பெற்ற வடிவமைப்புகள் மற்றும் புதுமைகளுக்கு பெயர் பெற்ற முதன்மையான பிராண்டுகளில் ஒன்றாகும்.