Published:Updated:

"டாக்டராகி என்னைப் போன்ற எளிய மக்களுக்கு உதவுவேன்"-நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய விழாவில் மாணவி

மாணவி

10,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க 14 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில், 37 பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் பெற 2,789 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

"டாக்டராகி என்னைப் போன்ற எளிய மக்களுக்கு உதவுவேன்"-நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய விழாவில் மாணவி

10,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க 14 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில், 37 பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் பெற 2,789 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

Published:Updated:
மாணவி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 141 மாணவர்களுக்கு HDFC வங்கியின் CSR நிதியிலிருந்து, ரூ.42.30 லட்சம் கல்வி உதவித் தொகையினை சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வாரியத்தின் சார்பில் நிகழ்ச்சி கண்ணகி நகரில் நடைபெற்றது. இந்நிதியுதவி கண்ணகி நகர் திட்டப்பகுதியிலிருந்து 60 மாணவர்களும், பெரும்பாக்கம் திட்டப்பகுதியிலிருந்து 53 மாணவர்களும், செம்மஞ்சேரி திட்டப்பகுதியிலிருந்து 11 மாணவர்களும், எழில் நகர் திட்டப்பகுதியிலிருந்து 13 மாணவர்களும், கூடப்பாக்கம் திட்டப்பகுதியிலிருந்து 3 மாணவர்களும், கே.பி. பார்க் திட்டப்பகுதியிலிருந்து 1 மாணவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் திரு எம். கோவிந்தராவிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“குடிசை மாற்று வாரியம் தற்போது முதல்வர் மு க ஸ்டாலினால், ` நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களைக் கல்வியில் ஊக்குவித்து சமுதாயத்தின் மேல் நிலைக்கு கொண்டு வருவதே முதல்வரின் நோக்கம். இதனடிப்படையில், கண்ணகி நகர், எழில் நகர்,பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் எங்கள் அதிகாரிகள் , NGO's உதவியுடன் 2 மாத காலம் குறிப்பிட்ட பகுதிகளில் களப்பணி மேற்கொண்டு பொருளாதார அளவில் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்தோம். 141 மாணவர்களுக்கு தலா 30,000 ரூபாய் வழங்கப்பட்டது . அதாவது மொத்தமாக ரூ. 42.3 லட்சம் உதவித்தொகை அமைச்சர் தா.மோ.அன்பரசனால் வழங்கப்பட்டது.அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை மிகவும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த உதவியைப் பெறும் சங்கவி என்னும் மாணவி,"டாக்டராகி ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் அளிப்பதும் தான் தன் ஒரே குறிக்கோள்" என்று நம்பிக்கையாகச் சொன்னார். பொறியியல் படித்து முடித்து தற்போது வழக்கறிஞர் பட்டம் பயிலும் செல்வி.ரம்யா, ``லாயர் ஆகி மக்களுக்கு உதவுவேன்" என்று உணர்வுப்பூர்வமாக கூறினார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய விழாவில்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய விழாவில்

MCA, BCA , B.TECH போன்ற படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கும் உதவி வருகிறோம். இனிவரும் காலங்களில், கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி, பைக் மெக்கானிக், ஏசி மெக்கானிக், பியூட்டி பார்லர் போன்ற பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உள்ளோம் .அண்மையில், IRT மூலம் சில மாணவர்களை டிரைவிங் பயிற்சி வழங்கினோம். மாணவர்களை அவர்களின் ஆர்வம் உள்ள துறைகளின் அடிப்படையில் பிரித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். 10,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க 14 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில், 37 பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் பெற 2,789 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 986 இளைஞர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் 3,000 இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவில் இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி வழங்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி,கல்வி உதவித்தொகை மட்டுமல்லாமல், வாரியத்தின் மூலம் கூவம் நதி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 63 நபர்களுக்குச் சிறுதொழில் உபகரணங்கள் ரூ.13.76 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களின் கோரிக்கையின்படி, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள “நம் குடியிருப்பு; நம் பொறுப்பு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். குடியிருப்போர் நலச் சங்கங்களின் 50% பங்களிப்புடன், வாரியத்தின் 50% நிதியும் சேர்த்து, இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்ணகி நகர் மற்றும் எழில் நகரில் வாரியத்தால் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களின் பழுதுகளை நீக்கி புதுப்பொலிவு பெற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுபோல், பல பகுதிகளில் ஏழை எளிய மக்களின் சமூக நிலையை உயர்த்த முயற்சி எடுத்து வருகிறோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது மட்டுமே எங்கள் ஒரே நோக்கம்" என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism