Published:Updated:

ஊட்டி : ரூ.38 கோடி வாடகை பாக்கி; ஒரே நாளில் 750 கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி நிர்வாகம்!

ஊட்டி மார்கெட்

ஊட்டி நகராட்சி, கடைகளுக்கு நிர்ணயம் செய்த புதிய வாடகைக் கட்டணத்தைச் செலுத்தாத 1,500-க்கும் அதிகமான கடைகளில் ஒரே நாளில் 750 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஊட்டி : ரூ.38 கோடி வாடகை பாக்கி; ஒரே நாளில் 750 கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி நிர்வாகம்!

ஊட்டி நகராட்சி, கடைகளுக்கு நிர்ணயம் செய்த புதிய வாடகைக் கட்டணத்தைச் செலுத்தாத 1,500-க்கும் அதிகமான கடைகளில் ஒரே நாளில் 750 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Published:Updated:
ஊட்டி மார்கெட்

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டுகளாக செயல்பட்டுவரும் நகராட்சி சந்தை. இந்த வளாகத்துக்குள் ஊட்டி நகராட்சிக்குச் சொந்தமான 1,500-க்கும் அதிகமான கடைகள் வணிகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் மூலம் ஆயிரக்கணக்கான வணிகர்கள் பயன்பெறுவதோடு, கடையின் வாடகைப் பணத்தின் மூலம் நகராட்சிக்கும் வருவாய் கிடைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடைகளின் வாடகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது நகராட்சி நிர்வாகம். ஆனால், புதிய வாடகைக் கட்டண உயர்வுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பழைய வாடகைக் கட்டணத்தையே செலுத்திவந்தனர். இதனால் நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பி புதிய வாடகைக் கட்டணத்தைச் செலுத்தக் கோரி தொடர்ந்து உத்தரவிட்டுவந்தது.

ஊட்டி
ஊட்டி

ஊட்டி நகராட்சிக்குப் போதிய வருவாய் கிடைக்காததால் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறிவருவதோடு மின் வாரியத்துக்கு மட்டும் ரூ.17 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் வெளிப்படையாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட புதிய வாடகையைச் செலுத்த நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. ஒரு வாரத்துக்குள் நகராட்சி புதிய வாடகைக் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் கடைகளுக்கு சீல் வைப்பதுடன் ஏலம் விடப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த அறிவிப்பின்படி, நேற்று நகராட்சிக் கடைகளுக்கு சீல் வைக்க காவல்துறை பாதுகாப்புடன் நகராட்சி பெண் கமிஷனர் தலைமையில் ஊழியர்கள் மார்க்கெட்டுக்குள் நுழைந்தனர். கடைகளுக்கு சீல் வைக்கவிடாமல் வியாபாரிகள் முற்றுகையிட்டு, கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி நகராட்சி அதிகாரிகள் வெளிப்புறங்களிலுள்ள சில கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் கோபமடைந்த வணிகர்கள், மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட வணிகர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். கைதுக்குப் பின் நகராட்சி ஊழியர்கள் மார்க்கெட்டுக்குள் சென்று பல கடைகளுக்கு சீல் வைத்தனர்.

ஊட்டி
ஊட்டி

இந்த விவகாரம் குறித்து நகராட்சி அதிகாரிகள், ``நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் 1,587 கடைகள் உள்ளன. வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாததால், தற்போது வாடகை பாக்கி ரூ.38 கோடி நிலுவையில் உள்ளது. இந்த வாடகை பாக்கியை வசூலித்தாலே, மின் வாரியத்துக்குச் செலுத்தவேண்டிய மின் கட்டண பாக்கி ரூ.17 கோடியைச் செலுத்த முடியும். ஊழியர்களுக்கும் மாதம்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்க முடியும். வாடகைக் கட்டணத்தை வசூலிக்க நீண்ட அவகாசம் கொடுத்துவிட்டோம் எந்தப் பயனும் இல்லை. கடைசியாக சீல் வைக்கும் நடவடிக்கைக்கு இறங்கிவிட்டோம்" எனத் தெரிவித்தனர்.

வாடகை பாக்கி குறித்து வணிகர்கள் தரப்பில், ``ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மார்க்கெட்டில் நான்கு தலைமுறைகளாக கடை நடத்தி வியாபாரம் செய்துவருகிறோம். மளிகை, காய்கறி, துணிக்கடை, இறைச்சிக் கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாகக் குறைந்த அளவிலான வாடகையே நகராட்சி நிர்வாகம் வசூலித்துவந்தது. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இரண்டு மடங்குக்கு மேல் கூடுதலாக கட்டணத்தை உயர்த்தியது. இவர்கள் நிர்ணயம் செய்துள்ள இந்தக் கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது. குறைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன்
விகடன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism