Published:Updated:

இதெல்லாம் ஒரு காரணமா..?! - பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்வுக்கு பயணிகள் எதிர்ப்பு

தெற்கு ரயில்வே

10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமப்பட்ட நிலையில், மேலும் அதை உயர்த்தியிருப்பது தவறான ஒன்று. பயணிகளுக்குச் செய்யப்பட வேண்டிய ஏராளமான நலத்திட்டங்களை ரயில்வே கிடப்பில் போட்டுள்ளது.

இதெல்லாம் ஒரு காரணமா..?! - பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்வுக்கு பயணிகள் எதிர்ப்பு

10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமப்பட்ட நிலையில், மேலும் அதை உயர்த்தியிருப்பது தவறான ஒன்று. பயணிகளுக்குச் செய்யப்பட வேண்டிய ஏராளமான நலத்திட்டங்களை ரயில்வே கிடப்பில் போட்டுள்ளது.

Published:Updated:
தெற்கு ரயில்வே

நாளை முதல் (அக்டோபர் 1ம் தேதி) முதல் 5-ஆம் தேதி வரையில் சனி, ஞாயிறு, ஆயுத பூஜை என தொடர்ச்சியாகப் பண்டிகை வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலிருந்து பஸ், ரயில்களில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டு வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக விழா நாள்களில் சென்னையிலிருந்து ரயில்கள் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். இவர்களை வழியனுப்ப உறவினர்களும் உடன் செல்வார்கள். இவர்களுக்கு நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையங்கள்
கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையங்கள்

இந்தச்சூழலில், அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து 2023 ஜனவரி 31-ஆம் தேதி வரையில் 4 மாதங்களுக்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழாக் காலங்களில் கூட்டத்தைத் தவிர்க்க, சென்னை கோட்டத்திற்குட்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது அக்டோபர் 1 - ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் நடைமேடைக் கட்டண உயர்வுக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஏ.வி.எஸ்.மாரிமுத்து
ஏ.வி.எஸ்.மாரிமுத்து

இதுகுறித்து ரயில்வே பயணிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, "இந்த கட்டண உயர்வு தேவையற்றது. விழாக்காலங்களில் பயணிகளுக்கு எரிச்சல் உண்டாக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதை பார்க்கிறோம். பல ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க நடைமேடையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதை சரிசெய்ய வேண்டுமெனப் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், இதையெல்லாம் சரிசெய்யாமல் ஏதோ ஒரு பொய்யான காரணத்தைக் கூறி கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையில் சரியாக இருக்கும்? 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமப்பட்ட நிலையில் இதை உயர்த்தியிருப்பது தவறான ஒன்று. பயணிகளுக்குச் செய்யப்பட வேண்டிய ஏராளமான நலத்திட்டங்களை ரயில்வே கிடப்பில் வைத்துள்ளது. பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அதிக வருவாய் ஈட்டுவதை விட்டுவிட்டுக் கூடுதல் ரயில்கள் இயக்கி அதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம்" என்றார். 

டிக்கெட்
டிக்கெட்

ஏற்கனவே, கொரோனா பரவலின் போது ரயில் நிலையங்களுக்குத் தேவையின்றி வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க 10 ரூபாய் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் கட்டணத்தைக் குறைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச்சூழலில், பண்டிகை கால கூட்ட நெரிசலை காரணம் காட்டி தெற்கு ரயில்வே கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.