Published:Updated:

`அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு... ரூ.500 கோடி கண்டுபிடிப்பு’ - வருமான வரித்துறை

செய்யாதுரை வீடு

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்திலும், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் தொடர்பான இடங்களிலும் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `தமிழ்நாட்டில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் விளம்பர ஏஜென்சி நடத்திவரும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சென்னை, மதுரை உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டது.

ரெய்டு
ரெய்டு

இந்தச் சோதனையின்படி இரு நிறுவனங்களிலிருந்தும் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க நகைகள், சொத்து விவரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தச் சொத்து மதிப்பு 500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!