Published:Updated:

`வீட்டுத்தீர்வை ரசீது தர ரூ.20,000 கேட்குறாங்க!’ - 2 ஆண்டாகக் காத்திருக்கும் குடும்பத்தினர்

கைக்குழந்தை, தாயுடன் சேர்மக்கனி
News
கைக்குழந்தை, தாயுடன் சேர்மக்கனி

``வீட்டுத்தீர்வைக்கு விண்ணப்பிச்சு ரெண்டு வருசம் ஆச்சு. இதுவரை கிடைக்கலை. 20,000 ரூபா பணம் கொடுத்தாத்தான் தீர்வை ரசீது தர முடியும்னு பஞ்சாயத்து ஆபீஸ்ல சொல்றாங்க. வீட்டுத்தீர்வை கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார் சேர்மக்கனி.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்மக்கனி. இவரின் தந்தை, சகோதரி என இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இவரின் தாய் கஸ்தூரி வயது முதிர்ந்தவர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள சேர்மக்கனிக்கு திருமணமாகி, அவரின் கணவர் பிரிந்துவிட, தன் கைக்குழந்தையுடன் தந்தையின் வீட்டில் வசித்துவருகிறார்.

தந்தை
தந்தை

சேர்மக்கனியின் குடும்பத்தினருக்குச் சொந்தமாக வீடு இல்லை என்பதால், வாடகை வீட்டில் வசித்துவந்தனர். இந்த நிலையில், வீட்டு வாடகைகூட கொடுக்க முடியவில்லை என்பதால் அப்பகுதியிலுள்ள உறவினர்கள், பொதுமக்கள் உதவியுடன் அவர்களின் பூர்வீக இடத்தில் தகரக்கூரையில் வீடு அமைத்து குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் சேர்மக்கனி. அந்த வீட்டுக்கு மின் இணைப்பும் பெற்றிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த இடத்துக்கு வீட்டு மனைப்பட்டா இல்லை என்பதால் வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார். ஆனால், ’வீட்டுக்கான வீட்டுத் தீர்வை ரசீது வேண்டும்’ என அவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலஈரால் ஊராட்சியில் வீட்டுத்தீர்வை ரசீது கேட்டு விண்ணப்பித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்வை ரசீது கொடுக்கப்பட வில்லை என்கிறார் சேர்மக்கனி. இது குறித்து சேர்மக்கனியிடம் பேசினோம். ``நான் கூலி வேலைக்கும், அம்மா நூறு நாள் வேலைக்கும் போறேன்.

தகர வீட்டில் சேர்மக்கனி
தகர வீட்டில் சேர்மக்கனி

அதுல கிடைக்கிற வருமானத்தைவெச்சுதான் குடும்பத்தை நடத்திட்டு வர்றேன். மனநிலை பாதிக்கப்பட்ட அப்பா, தங்கைக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தாலும், அது அவர்களின் மருத்துவச் செலவுக்கு போதவில்லை என்பதால் கடன் வாங்கித்தான் மருத்துவச் செலவை பார்த்துட்டு வர்றேன். பட்டா கேட்டு விண்ணப்பிச்சா வீட்டுத்தீர்வை ரசீது கேட்குறாங்க. வீட்டுத்தீர்வை ரசீது கேட்டு மேலஈரால் பஞ்சாயத்து ஆபீஸ்ல மனு கொடுத்து ரெண்டு வருஷம் ஆகுது. இதுநாள் வரைக்கும் தீர்வை ரசீது தரலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீர்வை ரசீது தரணும்னா இருபதாயிரம் ரூபாய் தரணும்னு ஊராட்சிச் செயலாளர் பாலமுருகன்கிறவர் கேட்கிறார். மின்சாரத்துறை மின் இணைப்பு கொடுத்திருக்கிறது. அதையே ஆதாரமாக வைத்து வீட்டுத்தீர்வை ரசீது தரலாம். அதுல எந்தச் சிக்கலும் இல்லைன்னு சிலர் சொல்றாங்க. இது சம்பந்தமா பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சேர்மக்கனி குடும்பத்தினர் வசிக்கும் தகர வீடு
சேர்மக்கனி குடும்பத்தினர் வசிக்கும் தகர வீடு

இனியாவது விட்டுமனைப்பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க மேலஈரால் ஊராட்சி மன்றச் செயலாளர் பாலமுருகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``அது அவர்களின் இடம்தான் என்பதற்கான பத்திரமோ, பட்டாவோ இல்லை. ஏதாவது ஓர் ஆதாரம் இல்லாமல் வீட்டுத் தீர்வை ரசீது தர முடியாது. ரசீது தரவில்லை என்பதால் அவர் நான் பணம் கேட்டதாகக் குற்றம்சாட்டுகிறார். பணம் எதுவும் கேட்கவில்லை” என்றார்.