Published:Updated:

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல..! - ஓர் அரசியல் பார்வை

அசுரன்

இவர்கள் இப்போது நாயகர்களாகி இருக்கிறார்கள். அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமா நாயகர்களைக் கொண்டாடுவதை நிறுத்தும்போது, ஒடுக்கப்பட்ட ஹீரோக்கள் உருவாவதையும் நிறுத்திக்கொள்ளலாம்.

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல..! - ஓர் அரசியல் பார்வை

இவர்கள் இப்போது நாயகர்களாகி இருக்கிறார்கள். அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமா நாயகர்களைக் கொண்டாடுவதை நிறுத்தும்போது, ஒடுக்கப்பட்ட ஹீரோக்கள் உருவாவதையும் நிறுத்திக்கொள்ளலாம்.

Published:Updated:
அசுரன்

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அதிகார மிடுக்குகளும் நிறைந்த தமிழ் சினிமா, மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது. அசலான அரசியல் சினிமாக்களில் புதுவரவு, வெற்றி மாறனின் 'அசுரன்'. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31cPqZX

சமூக இயக்கங்களாலும் இடஒதுக்கீட்டாலும் கல்வி கற்று அரசு வேலைக்குப் போன ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள், தங்கள் தந்தைமார்கள் சாவு வீட்டில் பறை அடிப்பதைத் தடுத்தார்கள்; ஆண்டை வீட்டுச் செத்த மாட்டைத் தூக்கிச் சுமப்பதைத் தடுத்தார்கள். தந்தைகளுக்குப் புது செருப்பு வாங்கிக் கொடுத்து தெருக்களில் நடக்கவைத்தார்கள். கக்கத்தில் கிடந்த தந்தையின் துண்டை தோளுக்கு மாற்றினார்கள். அதுவரை வராத கோயில் தேர், தங்கள் சேரித் தெருக்களில் நுழைய வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பினார்கள். இதுவரை தங்களுக்கு அடங்கிக் கிடந்தவர்கள் மெல்ல தலை தூக்கியபோது அதிகாரத்தில் இருந்தவர்கள் வன்முறையை ஏவினார்கள். அதுவரை தாக்குதலுக்கு மட்டுமே உள்ளான ஒடுக்கப்பட்டவர்கள், திமிறி எழுந்து திருப்பி அடித்தார்கள். இந்தச் சமூகக் கதைதான் அசுரனின் கதையும்.

அசுரன்
அசுரன்

'இது ஒரு ஹீரோயிசப் படம்தானே' என்று கேட்கப்படுகிறது. உண்மைதான். ஆனால், யார் இங்கே ஹீரோ, எது ஹீரோயிசம் என்பதில் இருந்துதான் அசுரனை மதிப்பிட வேண்டும். நீண்டகாலமாகவே தமிழ் சினிமாக்களில் பட்டியலின மக்கள் பண்ணையார்களுக்குக் குடைப் பிடிப்பவர்களாகவும், செருப்பைக் கக்கத்தில் இடுக்கி மரியாதை செலுத்துபவர்களாகவும், ஆதிக்கச் சாதிகளின் பங்காளிச் சண்டையில் எஜமான விசுவாசம் காட்டுபவர்களாகவுமே சித்திரிக்கப்பட்டார்கள். இவர்கள் இப்போது நாயகர்களாகி இருக்கிறார்கள். அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமா நாயகர்களைக் கொண்டாடுவதை நிறுத்தும்போது, ஒடுக்கப்பட்ட ஹீரோக்கள் உருவாவதையும் நிறுத்திக்கொள்ளலாம். அதுவரை இவர்கள் தங்களுக்கான அடையாளங்களுடன் வரட்டுமே!

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகப் பாத்திரங் களுக்கு வன்முறை என்பது தவிர்க்க முடியாத தாகவும் திணிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அவர்கள், சாதிப் பெருமிதம் பேசவில்லை; மற்ற சாதிகளைத் தாழ்த்தவில்லை. எந்தச் சாதிப் பெண்களையும் இழிவுப்படுத்தவில்லை. தங்களின் உரிமையை நிலைநாட்ட சில சமயம் ஆயுதம் ஏந்த வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் மறைக்கவில்லை.

'அசுரன்' படத்தின் முக்கியமான அம்சம், இறுதியில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் சொல்லும் வசனம். "நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ... ரூவா இருந்தா பிடுங்கிக் கிடுவானுவ... படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம். அதிகாரத்துக்குப் போ. ஆனா, அவங்க நமக்குப் பண்ணதை நீ யாருக்கும் பண்ணாதே!"

அசுரன்
அசுரன்

இதைத்தான் அம்பேத்கர் சொன்னார், பெரியார் சொன்னார், அயோத்திதாசர் சொன்னார், அசுரனும் சொல்கிறான்.

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல... அறமும் ஏந்தியவன்!

> வெற்றி மாறனின் நுட்பமான உத்திகள், தனித்துவ இயக்கம் 'அசுரன்' படத்துக்கு எப்படி வலு சேர்த்திருக்கிறது? அசுரனை ஒரு 'தலித்திய பாட்ஷா' என்று சொல்லலாமா? பஞ்சமி நிலப் பிரச்னையின் பின்னணி என்ன? - இப்படி பல கேள்விகளுக்கு எளிதாக விடை சொல்லும் ஜூனியர் விகடன் சிறப்புக் கட்டுரையை வாசிக்க > அடங்கிப்போக தயாராக இல்லை! - அசுரன் சொல்லும் அரசியல் https://www.vikatan.com/news/cinema/discuss-about-asuran-movie

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |