Published:Updated:

விழுப்புரம்: "தலைமுடியை ஏன் வெட்டல?"- மாணவர்களுக்கு சிகை திருத்தம் செய்து தலைமை ஆசிரியர் அதிரடி!

சிகை திருத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

தலைமுடி திருத்தம் உள்ளிட்ட ஒழுங்கு வழிமுறைகளைப் பின்பற்றாமல் வரும் பள்ளி மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியரே கத்திரிக்கோலால் சிகை திருத்தம் செய்து, அறிவுரை கூறி அனுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விழுப்புரம்: "தலைமுடியை ஏன் வெட்டல?"- மாணவர்களுக்கு சிகை திருத்தம் செய்து தலைமை ஆசிரியர் அதிரடி!

தலைமுடி திருத்தம் உள்ளிட்ட ஒழுங்கு வழிமுறைகளைப் பின்பற்றாமல் வரும் பள்ளி மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியரே கத்திரிக்கோலால் சிகை திருத்தம் செய்து, அறிவுரை கூறி அனுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Published:Updated:
சிகை திருத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1000 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் பல மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளிக்காமல் மோசமான சிகை அலங்காரம் செய்துகொண்டு கையில் வண்ண கயிறுகளுடன் வருவதாகவும், இதனால் மாணவர்களிடையே ஒழுக்கமில்லை என்ற கருத்தும் நிலவி வந்திருக்கிறது. எனவே, இவற்றைத் தடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பிலிருந்து பெற்றோர்களிடம் கூறிய போதும், 'பிள்ளைகள் தங்களுக்குக் கட்டுப்படவில்லை' எனப் பெற்றோர் கைவிரித்துள்ளனர்.

அறிவுரை வழங்கும் தலைமை ஆசிரியர்
அறிவுரை வழங்கும் தலைமை ஆசிரியர்

இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவியர் சந்திரகுமார் நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். பெற்றோர்கள், காவல்துறை, மக்கள் பிரதிநிதிகளிடம் அனுமதி பெற்றவர்... கையில் சீப்பு, கத்தரிக்கோல் மற்றும் எண்ணெய்யுடன் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று, பள்ளிக்கு வரும் சிகை திருத்தம் செய்யாத மாணவர்கள், எண்ணெய் வைக்காத மாணவர்களை அழைத்துத் தானே சிகை திருத்தம் செய்து, எண்ணெய் வைத்து, தலை சீவ வைத்து உள்ளே அனுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கையில் கட்டியிருக்கும் வண்ண கயிறுகளையும் நீக்கியவர், மாணவிகள் அதிகம் பூ வைத்துக்கொள்ளக் கூடாது, அதிக அலங்காரம் செய்து வரக்கூடாது, அனைவரும் சமமாக உடை அணிந்து வர வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

சிகை திருத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்
சிகை திருத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

மாணவர்கள் சிலர், போதைப் பொருள்களுக்கு அடிமையாகி முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை, ஆசிரியர்களுக்குக் கட்டுப்படுவதில்லை, பெற்றோரிடம் வரம்பு மீறிச் செயல்படுகிறார்கள் என்ற புகார்கள் வந்த நிலையில் தலைமை ஆசிரியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் இந்த நடவடிக்கை பெற்றோர் மத்தியிலும், ஊர் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், ஒரு சிலர் பொதுவெளியில் இவ்வாறு நடந்தது குறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். எது எப்படியோ, தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குச் சிகை திருத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.