Published:Updated:

ஆட்டோவில் தவறவிட்ட திருமணப்பெண்ணின் 23 பவுன் நகை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய டிரைவர்!

எஸ்.பி.யிடம் பரிசு பெறும் ராமர்

ஆட்டோவில் தவறவிட்ட மணப்பெண்ணின் 23 பவுன் நகையை நேர்மையுடன் ஆட்டோ டிரைவர் திரும்ப ஒப்படைத்த சம்பவம் விருதுநகரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் தவறவிட்ட திருமணப்பெண்ணின் 23 பவுன் நகை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய டிரைவர்!

ஆட்டோவில் தவறவிட்ட மணப்பெண்ணின் 23 பவுன் நகையை நேர்மையுடன் ஆட்டோ டிரைவர் திரும்ப ஒப்படைத்த சம்பவம் விருதுநகரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
எஸ்.பி.யிடம் பரிசு பெறும் ராமர்
விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி-முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகள் பிரியாவுக்கும், விருதுநகரைச் சேர்ந்த ராம் என்பவருக்கும் ராமர் கோயிலில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் விருதுநகர்-அல்லம்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றன. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மண்டபம் சென்றுவிட உறவினர்களும் அவரவர் வந்த வாகனங்களில் மண்டபத்துக்குப் புறப்பட்டனர்.

அந்த சமயம், மணப்பெண்ணின் தந்தை கருப்பசாமியும், அவரின் உறவினர்கள் 5 பேரும், அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி மண்டபம் வந்தடைந்தனர். அப்போது, கருப்பசாமி தன் கையோடு கொண்டு வந்திருந்த மணப்பெண்ணின் திருமண நகை 23 பவுனை கைப்பையோடு ஆட்டோவில் விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இதை ஆட்டோ டிரைவர் ராமர் என்பவரும் கவனிக்காவில்லை. பணி முடிந்து ஆர்.எஸ்.புரத்திலுள்ள அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார்.

எஸ்.பி.யிடம்  பாராட்டுச் சான்றிதழ் பெறும் ராமர்
எஸ்.பி.யிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் ராமர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையே, நகை மாயமானது தெரிந்து பதறிப்போன மணப்பெண் வீட்டார், இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுலோசனா தலைமையிலான போலீசார் திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுமார் ஒருமணிநேரத்துக்குப் பின்னர், ஆட்டோவை தொழிலுக்காக மீண்டும் எடுக்க வந்தபோது பின்சீட்டில் கைப்பை ஒன்று இருப்பதை ராமர் பார்த்துள்ளார். அப்போது, ஆட்டோவின் பின்சீட்டில் இருந்தது நகைப் பைதான் என்பதை உறுதிப்படுத்திய அவர், மீண்டும் திருமண மண்டபத்துக்கு வந்து உரியவர்களிடம் நகைப்பையை ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரின் நேர்மையான செயலை பாராட்டிய போலீசார் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆட்டோ டிரைவர் ராமரை நேரில் அழைத்து அவரது நேர்மையைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் மனோகர், அவருக்கு சான்றிதழும், பரிசும் வழங்கினார்.

எஸ்பியிடம் பரிசு பெறும் ராமர்
எஸ்பியிடம் பரிசு பெறும் ராமர்

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர் ராமரைத் தொடர்புகொண்டு பேசினோம், "காலையில ரயில்வே ஸ்டேஷனுக்கு சவாரி ஏத்திட்டு போய் இறக்கிவிட்டுட்டு திரும்பிவந்தேன். அப்பதான் ராமர் கோயிலுக்கு பக்கத்துல என் ஆட்டோவை மறிச்சு கல்யாண மண்டபத்துக்கு போகனும்னு சொல்லி ஆறு பேரு ஏறினாங்க. அவங்க எல்லாரும், விருதுநகர்-அல்லம்பட்டி ரோட்டுல இருக்குற கல்யாண மண்டபத்துல இறங்கினாங்க. இதுக்காக 70 ரூபாய் கட்டணம் வாங்கிக்கிட்டேன். கல்யாண பரபரப்புல இருந்ததால ஆட்டோவை கட் பண்ணிட்டு அவங்க எல்லாரும் வேகவேகமா மண்டபத்துக்குள்ள போயிட்டாங்க. எனக்கும் அடுத்தடுத்த வேலை இருந்ததால பணத்தை வாங்கி பையில் வச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்கு பிறகு ஹோட்டலுக்கு சாப்பாடு ஏத்துற ஆஃபர் இருந்துச்சு. அதுக்காக வண்டியை எடுக்கும்போது தான் பின்சீட்டில் நகை கைப்பை இருக்கிறதைக் கவனிச்சேன். சரி, இது கல்யாண மண்டபத்தில் இறங்கின பயணியோடதா தான் இருக்கணும்னு மனசுல நெனசிக்கிட்டேன். நகை பையைத் திரும்பக் கொண்டுபோய் ஒப்படைக்கனும்னு வேகவேகமா ஹோட்டலுக்கு எடுத்துக் குடுக்க வேண்டிய சாப்பாட்டை குடுத்திட்டு என் மனைவி தீப்பெட்டி ஆபீஸ்ல வேலை பார்க்குறா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவளுக்கு 8 மணிக்கு ஷிப்ட் ஆரம்பிச்சுரும். அதனால வீட்டுல இருந்து மனைவியை அழைச்சிட்டு போய் தீப்பெட்டி ஆபீஸ்ல வேலைக்கு விட்டுட்டு அங்கிருந்து நேரா மண்டபத்துக்கு வந்தேன். அப்போ வாசல்லயே, நகையை காணாங்கிற பதட்டத்துல எல்லாரும் ரொம்ப கவலையோட அங்கிட்டும், இங்கிட்டும் ஓடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஆட்டோவுல வந்து இறங்கின அய்யாவும் அங்கதான் நின்னுட்டு இருந்தார். அவர்கிட்ட போயி, 'ஐயா உங்க நகைப்பை ஒன்னு ஆட்டோல விட்டுட்டு வந்துட்டீங்க'னு சொன்னேன்.

அப்படியானு கேட்டவரு குடுகுடுன்னு ஓடிவந்து ஆட்டோவுல அவரு நகைப்பையை எங்க வச்சாரோ அந்த இடத்திலிருந்து திரும்பவும் நகை பையை எடுத்துகிட்டாரு. போலீஸ்காரங்க வந்து நகைய செக் பண்ணிப்பார்த்திட்டு அவர்கிட்ட திரும்ப கொடுத்தாங்க. எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லும் போதுதான் எனக்கு திருப்தியே வந்துச்சு. அந்த அய்யா என்னை வாஞ்சையோட அணைச்சு ரொம்ப நன்றி தம்பினு சொன்னப்போ, நகையை நேர்மையா திரும்ப கொடுத்துட்டோம்னு ரொம்ப பெருமையா இருந்துச்சு. உடனே, மண்டபத்துலேயே எனக்கு பொன்னாடை போர்த்தி போலீஸ் கௌரவிச்சாங்க. இது சம்பந்தமா எஸ்.பி.ஆபீசுக்கும் தகவல் சொல்லி எஸ்.பி.யும் நேர்ல கூப்பிட்டு பாராட்டினார்.

வாழ்க்கையில நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு எனக்கு வந்து சேர்ந்தா போதும். அதை தவிர வேறெதும் எனக்கு வேண்டாம். பெண் பிள்ளைக்காக சேர்த்து வச்சது முக்கியமான நேரத்துல தொலைஞ்சி போனா பெத்தவங்க மனசு என்ன பாடுபடுங்கிறது எனக்கு நல்லா தெரியும். ஏன்னா எனக்கும் ஒரு பெண்பிள்ளை இருக்கு. இன்னிக்கு நான் திரும்ப கொடுத்தது 23 பவுன் நகைனு சொன்னாங்க. அதோட மதிப்பு லட்சக்கணக்குல இருக்கும். ஆனா எனக்கு நகை பெருசில்ல. அத திரும்ப கொடுத்து நான் சேக்குற புண்ணியம் நாளைக்கு என் பிள்ளைக்கு வந்து சேர்ந்தா போதும் அதுதான் எனக்கு பெருசு" என்றார் பெருமையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism