Published:Updated:

`பீரங்கிகள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை!' - ஆவடி டேங்க் ஃபேக்டரி ராணுவக் கண்காட்சி | spot visit

கண்காட்சி
News
கண்காட்சி

இந்தக் கண்காட்சியில் குண்டு துளைக்காத போர்ச் சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்டுகள், குளிர்கால ஆடைகள் போன்ற ராணுவப் பயன்பாட்டு பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியா முழுவதும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் `ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் நாட்டின் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டுவருகிறது. நேற்றைய தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில், தமிழகத்தின் ஆவடி உட்பட நாட்டிலுள்ள 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளும் பங்கேற்றன. இந்த விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடி டேங்க் ஃபேக்டரியில், இந்திய படைத்துறையின் உடை தொழிற்சாலை ஆகியவற்றின் சார்பில் ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. ஆவடி டேங்க் ஃபேக்டரி சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் கிஷோர், படைத்துறை உடை தொழிற்சாலை பொதுமேலாளர் சுர்ஜித் தாஸ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

ஆவடி டேங்க் ஃபேக்டரி பகுதியிலிருக்கும் அஜய் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில் அஜெயா டி-72, பீஸ்மா டி-90, அருண் எம்.கே-ஐ, பிரிட்ஜ் லேயர் டேங்க் (பிஎல்டி) - டி72 ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பீரங்கிகளின் உதிரி பாகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கண்காட்சியில் குண்டு துளைக்காத போர்ச் சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்டுகள், குளிர்கால ஆடைகள் போன்ற ராணுவ பயன்பாட்டுப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் இந்தக் கண்காட்சிக்கு வந்து பாரவையிட்டுவருகின்றனர் .

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz