Published:Updated:

பட்டிமன்றம், போட்டிகள், பரிசுகள்; அவள் விகடனின் `அம்மாவும் நானும்' அன்னையர் தின நிகழ்வில் கோலாகலம்!

அன்னையர் தின கொண்டாட்டம்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மா-பிள்ளைகளுக்கு பரபரப்பான பட்டிமன்றம், சுவாரஸ்யமான சமையல் போட்டிகள், பிள்ளைகளுக்குப் படம் வரையும் போட்டிகள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அம்மாக்களும் பிள்ளைகளும் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருகின்றனர்.

பட்டிமன்றம், போட்டிகள், பரிசுகள்; அவள் விகடனின் `அம்மாவும் நானும்' அன்னையர் தின நிகழ்வில் கோலாகலம்!

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மா-பிள்ளைகளுக்கு பரபரப்பான பட்டிமன்றம், சுவாரஸ்யமான சமையல் போட்டிகள், பிள்ளைகளுக்குப் படம் வரையும் போட்டிகள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அம்மாக்களும் பிள்ளைகளும் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருகின்றனர்.

Published:Updated:
அன்னையர் தின கொண்டாட்டம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு, அவள் விகடன் மற்றும் பூர்விகா மொபைல்ஸ் இணைந்து நடத்தும் `அம்மாவும் நானும்' நிகழ்ச்சி சென்னை, மேற்கு அண்ணாநகர், கே.இ.எம் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடந்துவருகிறது.

அன்னையர் தின கொண்டாட்டம்
அன்னையர் தின கொண்டாட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சென்னை, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலாவுக்கும், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்துக்கும் அவள் விகடன் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் அவள் விகடன் முதன்மை இதழாசிரியர் வைதேகி. விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்ற, நிகழ்ச்சி தொடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி விமலா, ``அன்பு, அறிவு, அழகு... இதன் மறுபெயர் அவள் விகடன். தாய்மை உலகத்தின் மிகப்பெரிய பேராற்றல். மனிதனை மனிதனாக வைத்திருப்பதும் தாய்மைதான். தாய்மார்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகிறார்கள். அம்மாக்கள் தங்களது விருப்பங்களை தங்கள் பிள்ளைகள், கணவருக்காக விட்டுக் கொடுக்கிறார்கள். தாய்மையைப் போற்ற வேண்டியது அனைவரின் கடமை" என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், ``சிறுவயதில் தங்களுக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த தாய்மார்களுக்கு, இப்போது மொபைலை பயன்படுத்துவதை சொல்லிக்கொடுக்க பிள்ளைகள் சலித்துக்கொள்கிறார்கள். அம்மாக்களுக்கு நவீன கைப்பேசி பயன்பாட்டை கற்றுத் தருவது பிள்ளைகளின் கடமை. முதலில், பிள்ளைகள் கேட்பதற்கு எல்லாம் 'yes' சொல்வதை அம்மாக்கள் நிறுத்துங்கள்; அவர்களது தவறான செயல்பாடுகளுக்கும் மௌனமாக இருப்பதன் மூலம் சம்மதம் தெரிவிக்காமல், பிள்ளைகள் தவறு செய்யும்போது 'No' சொல்லிப் பழகுங்கள். அம்மாவாக இருப்பது முக்கியம். அதைவிட முக்கியம் சுயமரியாதையுடன் வாழ்வது. தாயிடமிருந்து பிள்ளைகள் வலிமையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், அம்மாக்கள் அனைவரும் வலிமையுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத், ''எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லோருக்கும் மனம் முதலில் தேடுவது அம்மாவைத்தான். குழந்தைகளிடம் தோழமையோடு பழகினால்தான் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்வார்கள். தோழமையோடு பழகினால், பிள்ளைகள் தீயவழியில் செல்லாமல் அவர்களை அம்மாக்களால் நல்வழிப்படுத்த முடியும். அம்மாக்கள் எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்கக் கூடாது. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட வேண்டும். அம்மாக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதற்கான நேரத்தை அவர்கள் செலவழிக்க வேண்டும்'' என்றார்.

சமையல் போட்டிகள்
சமையல் போட்டிகள்

தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மா - பிள்ளைகளுக்கு விறுவிறுப்பான பட்டிமன்றம், சுவாரஸ்யமான சமையல் போட்டிகள், பிள்ளைகளுக்குப் படம் வரையும் போட்டிகள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அம்மாக்களும் பிள்ளைகளும் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism