பெண்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும், வாசகிகளின் மகிழ்ச்சி கொண்டாட்டமான அவள் விகடன் நடத்திய `ஜாலி டே' இன்று மதுரையில் உற்சாகமாக நடந்து வருகிறது. மதுரை அழகர்கோயில் சாலையில் அமைந்துள்ள சமூக அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாசகிகள் கலந்து கொண்டனர்.

முன்னோடி இயற்கை விவசாயி புவனேஸ்வரி, ஹலோ பண்பலை தொகுப்பாளர் செல்வகீதா, மதுரை மாநகராட்சி தேர்தலில் வென்ற இளம் வேட்பாளர் லக்ஷிகாஸ்ரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்கள். பிறகு, பெண்களால் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதைப் பற்றி சிறப்பு விருந்தினர்கள் சிறு உரையாற்றினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பட்டிமன்றம், பாடல், நடனம், காமெடி, ரங்கோலி, அடுப்பில்லாத சமையல் எனப் பல்வேறு போட்டிகளில் பெண்கள் அசத்தினார்கள். மதுரை முத்து அதிரடியான காமெடிகளை சொல்லி கூட்டத்தினரை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.

மகாத்மா காந்தி முதலில் வேட்டிக்கு மாறிய ஊர், சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் ஊர் என மதுரையின் பெருமையைக் கூறி பேச்சைத் தொடங்கிய அவர், பெண்களின் சிறப்பை தன் நகைச்சுவை பாணியில் எடுத்துக் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மதுரை முத்துவுடன் அவருடைய இரு மகள்களான யாழினி ஸ்ரீயும் முத்துரா ஸ்ரீயும் வந்திருந்தனர். அவருடைய மூத்த மகள் தன் பங்குக்கு ஒரு நகைச்சுவை கூறி அனைவரையும் மகிழ வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு ரசனையான நிகழ்ச்சிகள் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.