Published:Updated:

நீலகிரி: வாட்டிய வறுமை.. 3 குழந்தைகளையும் விற்ற பெற்றோர்! - ஊட்டியை உறையவைத்த குழந்தை விற்பனை

ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையம்
ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையம்

"என்னோட வீட்டுக்காரர் டிரைவர். நானும் கூலி வேலை செய்றேன். குழந்தைகள வளர்க்க வீடு இல்ல. எந்த வருமானமும் இல்லாததால வறுமைய சமாளிக்க முடியல. வேற வழி தெரியாம குழந்தைய குடுத்துட்டோம்"

வறுமை காரணமாக ஊட்டியைச் சேர்ந்த தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளை விற்பனை செய்து, மூன்றாவது குழந்தையையும் விற்க முயன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையம்
ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையம்

ஊட்டி அருகில் உள்ள காந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபின், மோனிஷா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை உள்ளனர். சுற்றுலா வாடகை கார் வாகன ஓட்டுநரான ராபின், பல மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்துள்ளார். இந்நிலையில் வறுமை காரணமாக குழந்தைகளை விற்பனை செய்ய முடிவு செய்து, 2 வயது பெண் குழந்தை, 3 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்துள்ளார். மூன்றாவதாக 3 வயது பெண் குழந்தையையும் விற்க முயன்ற போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

திருவள்ளூர்: தவறான ஊசி; இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! - குழந்தை பிறந்த 3-வது நாளில் பரிதாபம்

ஊட்டியை உறையவைத்த இந்த நிகழ்வு குறித்து பேசிய ஊட்டி மகளிர் காவல்துறையினர், "2 வயது பெண் குழந்தையை கோவையிலும், 3 மாத ஆண் குழந்தையை சேலத்தில் உள்ள தம்பதிக்கும் விற்பனை செய்துள்ளனர். கடைசியாக மூன்று வயது பெண் குழந்தையை திருப்பூரில் உள்ள ஒரு தம்பதிக்கு விற்பனை செய்ய முயன்றபோது எங்களிடம் சிக்கினார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 3 குழந்தைகளையும் மீட்டுள்ளோம். இது தொடர்பாக 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்"என்றனர்.

குழந்தைகளின் தாய் மோனிஷா
குழந்தைகளின் தாய் மோனிஷா

குழந்தைகளின் தாய் மோனிஷா பேசுகையில், " என்னோட வீட்டுக்காரர் டிரைவர். நானும் கூலி வேலை செய்றேன். குழந்தைகள வளர்க்க வீடு இல்ல. எந்த வருமானமும் இல்லாததால வறுமைய சமாளிக்க முடியல. வேற வழி தெரியாம குழந்தைய குடுத்துட்டோம்" என்றார். வறுமை காரணமாக குழந்தையை பெற்றொர்களே விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு