Published:Updated:

`கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து முக்கியம்!' - திண்டுக்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

``கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக மிக அவசியம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் பழங்கள், காய்கறிகள், பால், புரதம் உள்ள முட்டை, மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் பழனி எம்.எல்.ஏ ஐ.செந்தில்குமார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீமந்தப் பொருள்களை வழங்கிய பழனி எம்.எல்.ஏ ஐ.செந்தில்குமார், ``கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக மிக அவசியம். பிரசவக் காலத்தில் பெண்களுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் பழங்கள், காய்கறிகள், பால், புரதம் உள்ள முட்டை, மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள்
மகப்பேறுக்கு தயாரான கர்ப்பிணி ஊழியர்; குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் தந்த அரசு அலுவலக ஊழியர்கள்!

அவர்களுக்கு முழுச்சத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்கும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்'' என்றார்.

இதையடுத்து 250 கர்ப்பிணிகளுக்கு சீமந்தப் பொருள்களை வழங்கினார் ஐ.செந்தில்குமார். திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி உடனிருந்தார்.

`பெற்றோர் இல்லாத குறை இல்லை!'

இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் திட்ட அதிகாரி பூங்கொடி, ``திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 14 பிளாக்குகளில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 2,850 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். இதில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற விளக்கங்களை கொண்ட கையேடு வழங்கப்படும்.

சீமந்தப்பொருள்கள்
சீமந்தப்பொருள்கள்
Covid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது?

மேலும் 2 வகை காய்களுடன் 5 வகையான உணவும், பூ, தட்டு, பழங்கள், பேரிச்சம்பழம், கடலை மிட்டாய், சேலை, வளையல் உள்ளிட்டவைகளைக் கொண்ட சீமந்தப்பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழ்வில் பங்கேற்கும் கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பெரிதும் நெகிழ்ந்தவர்கள், பெற்றோர் இல்லாத பெண்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 3,100 பயன்பெற உள்ளனர்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு