Published:Updated:

`வெள்ளத்தில் 400 பேரைக் காப்பாற்றிய திக் திக் நிமிடங்கள்'- ஐபிஎஸ் அனுபவம் பகிரும் கோவை காவல் ஆணையர்

வே. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

"என்னுடைய 17 ஆண்டு ஐ.பி.எஸ் சேவை காலகட்டத்தில் நிறைய இக்கட்டான, சவால் நிறைந்த சூழல்களை எதிர்கொண்டிருக்கிறேன்" - பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

`வெள்ளத்தில் 400 பேரைக் காப்பாற்றிய திக் திக் நிமிடங்கள்'- ஐபிஎஸ் அனுபவம் பகிரும் கோவை காவல் ஆணையர்

"என்னுடைய 17 ஆண்டு ஐ.பி.எஸ் சேவை காலகட்டத்தில் நிறைய இக்கட்டான, சவால் நிறைந்த சூழல்களை எதிர்கொண்டிருக்கிறேன்" - பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

Published:Updated:
வே. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, `ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி’ என்ற இலவசப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. நடப்பாண்டில் ஏற்கெனவே சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

கோவைப் பயிற்சி முகாம்
கோவைப் பயிற்சி முகாம்
இந்நிலையில், வருகிற அக்டோபர் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாட உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், “போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் எப்படித் தயாராவது, இதன் மூலம் என்னென்ன சேவைகள் செய்ய முடியும் என நிறைய அனுபவங்களைப் பகிர உள்ளோம். என்னுடைய 17 ஆண்டு ஐ.பி.எஸ் சேவை காலகட்டத்தில் நிறைய இக்கட்டான, சவால் நிறைந்த சூழல்களை எதிர்கொண்டிருக்கிறேன்.

நொய்யல் ஆறு
நொய்யல் ஆறு
கோப்புப் படம்

2011-12 நான் திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றிய போது நொய்யல் ஆற்றில் திடீரெனப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றோரம் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் இருந்தன. அந்த மக்கள் எல்லாம் இந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணி. மின்சாரம் எல்லாம் துண்டித்துவிட்டு, என்னுடைய அதிரடிப் படையுடன் தண்ணீரில் இறங்கி மீட்புப் பணியை ஆரம்பித்தோம். என்ன நடக்குமோ என்கிற ஓர் அச்சம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், காலைக்குள் 400-க்கும் மேற்பட்டோரை மீட்டுவிட்டோம்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

துரதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிரிழந்துவிட்டனர். அதே நேரத்தில் 400 பேரைக் காக்க முடிந்தது. இதுபோன்ற நிறைய உணர்ச்சிகரமான அனுபவங்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகாலத்தில் இருக்கும். அந்த அனுபவங்கள் குறித்தெல்லாம் நேரில் சந்தித்துப் பேசுவோம்” என்றார்.

முன்பதிவுக்கு - https://forms.gle/FBMx2zMHSkriQXZb7