Published:Updated:

பிரஸ் மீட்டில் கேள்வி எழுப்பிய நிருபர்.. மறுநாளே மாஸ்க் அணிந்துவந்த பீலா ராஜேஷ்!

பீலா ராஜேஷ்
News
பீலா ராஜேஷ்

அதேநேரம் 81 பேர் இதுவரை நம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 28711 பேரும் அரசு முகாமில் 135-க்கு அதிகமானவர்களும் இருக்கிறார்கள். 68,519 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், மே மாதம் 3ம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அச்சம் தரும் வகையில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆகவும் இருந்தது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே நேற்று தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறித்த இன்றைய நிலவரங்களை சுகாதாரத்துறை பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார். நேற்றைய சந்திப்பின்போது, நிருபர் ஒருவர் ``பிரஸ் மீட்டில் நீங்கள் மாஸ்க் அணிவதில்லை.. ஏன்?" என்று பீலா ராஜேஷிடம் கேள்வி எழுப்பினார். ``சுகாதாரப் பணியாளர்கள்தான் மாஸ்க் அணிய வேண்டும். அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட, நோயால் அவதிப்படுபவர்கள் என்றால் மாஸ்க் பயன்படுத்தலாம். மற்றபடி, நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தாலே போதும்" என்று விளக்கம் கொடுத்தார். இதற்கிடையே இன்றைய பிரஸ் மீட்டுக்கு மாஸ்க் அணிந்து வந்திருந்தார் பீலா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்தியாளர்களிடம் பேசியவர், ``தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேரில் 21 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1204ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6509 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் அதிகம். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 81 பேர் இதுவரை நம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 28711 பேரும் அரசு முகாமில் 135-க்கு அதிகமானவர்களும் இருக்கிறார்கள். 68,519 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் என 33 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரஸ் மீட்டில் கேள்வி எழுப்பிய நிருபர்.. மறுநாளே மாஸ்க் அணிந்துவந்த பீலா ராஜேஷ்!

இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9, சென்னை -5, தஞ்சாவூர் -4, தென்காசி-3, மதுரை -2, ராமநாதபுரம் -2, நாகப்பட்டினம் -2, கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 31 பேரில் 15 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். மேலும், 8 பேர் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள். மொத்தமாக தமிழகத்தில் குழந்தைகள் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 23. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 81. உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6, 509 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த மண்டல ரீதியாக 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 நாள் வரை இந்த வைரஸ் உயிர் வாழும். அதனால்தான் கண்டெயின்மெண்ட் மண்டலங்களில் இதனை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றவரிடம், ஆந்திர மருத்துவரை தகனம் செய்வதை மக்கள் புறக்கணித்துள்ளனரே என்று கேள்வி எழுப்பினர். ``கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளோம். இதில் அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும்" என்றார்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

அப்போது, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக செய்யப்படுவாதக குற்றச்சாட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. ``மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் நமக்கு மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகுதான் முதல் நோயாளி வந்தார். கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முன்பே வந்துவிட்டது. அதனால் அப்போதிலிருந்தே பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டனர். பரிசோதனைக் கூடங்களில் பணியாளர்கள் இல்லாததால் அவை செயல்படவில்லை என்பது முற்றிலும் தவறு. எல்லாம் நன்றாகச் செயல்படுகின்றன.

கால்நடைத்துறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இனிவரும் காலங்களில் பயண வரலாறு, தொடர்பு இல்லாவிட்டாலும், அறிகுறிகள் உள்ளவர்களிடம் பரிசோதனை செய்யப்படும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிகிறோம். தடுப்பு நடவடிக்கைகளில் பின்னடைவு இல்லை. முன்னடைவு தான் இருக்கிறது" என்றார்.