Published:Updated:

கோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...!’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி

பா.ஜ.க அண்ணாமலை

`குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்’ என பா.ஜ.க-வில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...!’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி

`குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்’ என பா.ஜ.க-வில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.

Published:Updated:
பா.ஜ.க அண்ணாமலை

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பி.ஜே.பி-யில் இணைந்துள்ளார். இதையடுத்து, அவர் இன்று கோவை பி.ஜே.பி அலுவலகத்துக்கு வருகை தந்தார். கோவை வந்த அண்ணாமலைக்கு மேள தாளங்களுடன், பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஏராளமான பி.ஜே.பி நிர்வாகிகள் சித்தாப்புதூர் வி.கே.மேனன் சாலையிலுள்ள பி.ஜே.பி அலுவலகம் முன்பு கூடினர்.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், பி.ஜே.பி நிர்வாகிகளை. ``தனிமனித இடைவெளி உத்தரவைக் கடைபிடியுங்கள். மாஸ்க் அணியுங்கள்” என்று அறிவுறுத்தினர். மதியம் 2 மணிக்கு வந்த அண்ணாமலை, சிறிது நேரம் தொண்டர்கள் முன்னிலையில் பேசிவிட்டு, பி.ஜே.பி அலுவலகத்துக்குச் சென்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ``பா.ஜ.க-வில் இணைந்ததில் பெருமையடைகிறேன். கடைக்கோடி தொண்டனுக்காக நிற்கும் கட்சி பா.ஜ.க. 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்புமுனை ஏற்படும். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். எனக்குக் கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனது அரசியல் தமிழ்நாட்டை நோக்கியே உள்ளது. தமிழ்நாட்டுக்கு மாற்றுப்பாதை தேவை. தமிழ்நாட்டில் பா.ஜ.க முக்கியமான சக்தியாக வரும். புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

அதேபோல, தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கவும் இல்லை. பா.ஜ.க-வை தமிழர்களுக்கு எதிரான கட்சி என எப்படிச் சொல்ல முடியும்? திராவிடக் கட்சிகள் ஆட்சியில், தமிழுக்காக செய்தவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கர்நாடகாவில் மழை குறைவாக பெய்யும்போதுதான் காவிரி நீர் பிரச்னை வருகிறது. மத்திய அரசு காவிரி நதி நீர் விவகாரத்தில் அநியாயம் செய்யவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. தமிழுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேநேரத்தில், தமிழர்கள் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். நீட் தேர்வை உரிய வசதிகளுடன் அரசு நடத்த முடியும். `முடியாது... முடியாது...’ என்றால் நாடு முன்னேறாது. ஆயுஷ் கூட்டத்தில் இந்தி தெரியாதவர்களை வெளியேறச் சொன்னது கண்டனத்துக்குரியது. அது அரசு அதிகாரி சொன்னது. எனவே, அதை அரசின் கொள்கையாகப் பார்க்கக் கூடாது. தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

தமிழ்நாடு கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சியில்லாமல் அப்படியே நின்றுவிட்டது. ஆன்டி டெல்லி அரசியல் செய்யக் கூடாது, ஆன்டி டெல்லி அரசியலால், தமிழ்நாட்டுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட தலைவர்கள் இல்லை. சமூக வலைதளங்களில் விமர்சனம் எனும் குப்பைகளைப் போடுகிறார்கள். அந்தக் குப்பையில் நாங்கள் தாமரையை வளர்த்துவோம்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழகம் எப்போதுமே மற்ற மாநிலங்களைவிட முன்னேறித்தான் இருக்கிறது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியாது. எனவே, நாம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், பெல்ஜியம், ஸ்வீடன் போன்ற வளர்ந்த நாடுகளுடன்தான் நம்மை ஒப்பிட வேண்டும்” என்றார்.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

இந்தச் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பினர். ஆனால், 'தாமதமாகிவிட்டது... அவ்வளவுதான்' எனக் கூறி பி.ஜே.பி நிர்வாகிகள் அண்ணாமலையைப் பேசவிடாமல் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism