Published:Updated:

மாயமான மனைவி; கண்டுபிடித்துத் தராத போலீஸைக் கண்டித்து பாஜக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி!

தீக்குளிக்க முயற்சி!

முல்லைநாதன் கடந்த வருடம், ஏப்ரல் மாதம் தன் மனைவி காணாமல்போனது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாயமான மனைவி; கண்டுபிடித்துத் தராத போலீஸைக் கண்டித்து பாஜக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி!

முல்லைநாதன் கடந்த வருடம், ஏப்ரல் மாதம் தன் மனைவி காணாமல்போனது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Published:Updated:
தீக்குளிக்க முயற்சி!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க நிர்வாகி, தான் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சீர்காழி காவல்துறையினரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவி மாயம் பா.ஜ.க நி்ர்வாகி தீக்குளிக்க முயற்சி
மனைவி மாயம் பா.ஜ.க நி்ர்வாகி தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லைநாதன் (வயது 51). இவர் பா.ஜ.க-வின் வழக்கறிஞர் அணியின் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தன் மனைவி காணாமல்போனது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர், நீதிமன்ற ஆணையுடன்  முல்லைநாதன் அளித்த புகாரிலிலும் சீர்காழி காவல்துறையினர் எந்த நடவடிக்கையும்  எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முல்லைநாதன் இன்று (21.01.2022) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு   தீக்குளிக்க முயன்றார்.

பா.ஜ.க. நி்ர்வாகி தீக்குளிக்க முயற்சி
பா.ஜ.க. நி்ர்வாகி தீக்குளிக்க முயற்சி

அப்போது, அங்கிருந்த போலீஸார் விரைந்து மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும்,  அவரிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்டு காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.