Published:Updated:

திண்டுக்கல்: பாஜக பிரமுகர் கார் செட்டுக்கு தீ! - குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி மறியல் - நடந்தது என்ன?

மறியல்

கார் செட்டுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக பாஜக-வினர் மற்றும் இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: பாஜக பிரமுகர் கார் செட்டுக்கு தீ! - குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி மறியல் - நடந்தது என்ன?

கார் செட்டுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக பாஜக-வினர் மற்றும் இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
மறியல்

திண்டுக்கல் குடைபாறைபட்டியை​ச்​ சேர்ந்தவர் செந்தில்பால்ராஜ். பா.ஜ.க கிழக்கு மாவட்ட மாநகர் மேற்கு மண்டலத் தலைவரான இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் குடைப்பாறைபட்டியில் அமைந்துள்ள இவருக்குச் சொந்தமான இடத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார். 

தீயில் கருகிய கார் மற்றும் செட்
தீயில் கருகிய கார் மற்றும் செட்

​இதற்கிடையே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் இவரது கார் செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்த ​ஒரு ​கார் மற்றும் ​5 இருசக்கர வாகனங்களை அணைத்தனர். 

​வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த இந்தச் சம்பவத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்று​ம்​​​​​ இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமாகின. இது குறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பா​.​ஜ​.​க நிர்வாகியின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
போராட்டம்

இதையடுத்து வாகனங்களுக்கு ​தீ வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பா.ஜ.க கிழக்கு மாவட்டத் தலைவர் தனபால் தலைமையில் திண்டுக்கல்-வத்தலகுண்டு மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர். 

சாலை மறியல்
சாலை மறியல்

அதையடுத்து, ``​வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துவிட்டு இரண்டு மர்ம நபர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். விரைந்து சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வோம்" என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.