Published:Updated:

``வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் எந்த விவசாயியும் போராடவில்லை!" - அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

``உத்தப்பிரதேசத்தில் நடந்தது துயரச் சம்பவம். `இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்’ என அந்த மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார். அரசு வேலை, இழப்பீடு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது. வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எந்த விவசாயியும் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே ஒப்பந்த முறை இருக்கிறது. முட்டை, கோழி உள்ளிட்டவற்றை ஒப்பந்த அடிப்படையில்தான் வாங்கிவருகிறோம். இது யாருக்கும் எதிரான சட்டம் இல்லை என்பதற்குச் சான்றாக விவசாயிகள் யாரும் போராட்டம் செய்யவில்லை.

இந்திய அளவில் எதிர்க்கட்சி, தமிழக அளவில் ஆளுங்கட்சியான திமுக அகில இந்திய பந்த்துக்கு அழைப்பு விடுத்தபோதுகூட, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநில விவசாய சங்கங்கள்தான் போராட்டத்தை நடத்திவருகின்றன.

வேளாண் சட்டங்கள்
வேளாண் சட்டங்கள்

விவசாய சட்டங்களால் பாதிப்பு எனக் குறிப்பிட்டுச் சொன்னால், அதை மாற்ற அரசு தயாராக இருக்கிறது. தற்போதுவரை யாரும் அப்படி குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று பிரதமர் பேட்டி அளித்திருக்கிறார். ஜி.எஸ்.டி என்றால் என்ன என்பது தெரியாமல் ஒரு எம்.பி. ஐந்து ஆண்டுகளாக எதிர்த்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதை 2016-ம் ஆண்டிலிருந்து பெட்ரோலிய அமைச்சர் சொல்லிவருகிறார். 2017 முதல் பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி-யில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது முடிவடையும் காலம் வந்துவிட்டது. அடுத்தகட்டமாக அதை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

சட்டசபை
சட்டசபை

பெண்களுக்கு ரூ.1,000, கூட்டுறவு வங்கியில் தங்க நகைக்கடன் தள்ளுபடி என அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. முதல்வர் என்ன செய்தார்... அவரால். என்ன செய்ய முடிந்தது? சட்டமன்றக் கூட்டம் புகழாரக் கூட்டமாக உள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் எனச் சொன்னார்கள். கர்நாடக, ஆந்திரப்பிரதேசம் ஏற்கெனவே வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் போட்டனர். தனி பட்ஜெட் என்பதைவிட, அதன் மூலம் என்ன சாதிப்பீர்கள் எனச் சொல்ல வேண்டும். கோயில்கள் திறக்கப்படாததை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தவிருக்கிறோம். தற்போது, சினிமா தியேட்டர் திறக்கப்பட்டிருக்கிறது. ஒரே மாதிரியான லாஜிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

``திமுக ஆட்சி செய்வதால், பெண்கள் சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!" - அண்ணாமலை
தியேட்டர்
தியேட்டர்

கோயிலுக்குப் போவதால் கொரோனா வரும் என்றால், சினிமா தியேட்டர் சென்றால் கொரோனா வராதா... ஸ்கூலுக்குச் சென்றால் வராதா? மேலும், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயில்களை அடைக்கின்றனர். இதன் காரணமாக திங்கள்கிழமை கோயில்களில் அதிக அளவு கூட்டம் கூடுகிறது’’ என்றார் அண்ணாமலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு