Published:Updated:

`ஐ.பி.எல் நினைப்பிலேயே திமுக எம்.பி-க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்!’ - அண்ணாமலை

பாலியல் வழக்கு தொடர்பான பெண் வீட்டுக்குச் சென்று அந்த போட்டோவைப் போட்டதற்காகத்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வருகிற 16-ம் தேதி மக்கள் ஆசி யாத்திரையை கோவையில் தொடங்கவிருக்கிறார். தொடர்ந்து நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அவர் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த யாத்திரையின்போது முருகன், தனது பெற்றோரிடம் சென்று ஆசி வாங்கவிருக்கிறார்.

எல்.முருகன்
எல்.முருகன்
அண்ணாமலை ஆட்டம், ராமதாஸ் ரூட்; பதறும் எடப்பாடி !

மக்களும் அமைச்சரும் இடைவெளி இல்லாமல் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த யாத்திரை. புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் எல்லோரும் அந்தந்தப் பகுதிகளில் யாத்திரை மேற்கொள்கின்றனர். கொரோனா தளர்வுக்கு பிறகு, முருகன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செல்வார்.

தி.மு.க ஆட்சி 100 நாள்களைக் கடந்திருக்கிறது. எந்தவோர் ஆட்சியாக இருந்தாலும் ஆறு மாத காலம் அவகாசம் தேவை. இந்தக் காலகட்டத்தில், அவர்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இப்போதுதான் தொடங்கியுள்ளனர். டி.ஜி.பி., தலைமைச் செயலாளர் என்று பல நல்ல அதிகாரிகளைக் கொண்டுவந்துள்ளனர். இப்போது அமைச்சர் சுப்பிரமணியம், மத்திய அரசு கூடுதலாகவே தடுப்பூசிகளைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

டிஃபென்ஸ் காரிடாரைக் கொண்டுவந்ததால் ரூ.2,000 கோடி வருவாய் வந்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால் மக்கள் அதிகம் பயனடைவார்கள். நாங்கள் இங்கு எதிர்க்கட்சிதானே தவிர, எதிரிக் கட்சி இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க எப்போதுமே தேர்தலுக்கு தயாராக உள்ளது. தி.மு.க-வை எதிர்த்து தினசரி போராடும் ஒரே கட்சி பா.ஜ.க-தான். பாலியல் வழக்கு தொடர்பான பெண் வீட்டுக்குச் சென்று அந்த போட்டோவைப் போட்டதற்காகத்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளனர். தி.மு.க-வினர் ஐ.பி.எல் மேட்ச் நினைப்பிலேயே நாடாளுமன்றத்துக்குச் சென்று, யார் எதைப் பேசினாலும் ஒரு போர்டை எடுத்துக் காட்டுகின்றனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கொரோனா காலகட்டத்தில் 2-வது அலையில் முன்களப்பணியாளர்கள் இறந்துகொண்டிருந்தபோது, அந்த எம்.பி கிரிக்கெட் அணி உரிமையாளரின் தம்பி என்ற அடிப்படையில் அவர் மைதானத்துக்குச் சென்றார்” என்று கூறினார்.

அண்ணாமலை ஆட்டம், ராமதாஸ் ரூட்; பதறும் எடப்பாடி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு