Published:Updated:

'முதல்வர் மகனுக்கு 10 துறை, மருமகனுக்கு 10 துறை... என்ன அரசாங்கம் இது?' - கொதிக்கும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

`அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம், முதல்வரின் வீட்டில் இருக்கும் மிக முக்கிய உறுப்பினர் ஒருவர் தனியாக அழைத்துப் பேசுகிறார்.' - வானதி சீனிவாசன்

'முதல்வர் மகனுக்கு 10 துறை, மருமகனுக்கு 10 துறை... என்ன அரசாங்கம் இது?' - கொதிக்கும் வானதி சீனிவாசன்

`அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம், முதல்வரின் வீட்டில் இருக்கும் மிக முக்கிய உறுப்பினர் ஒருவர் தனியாக அழைத்துப் பேசுகிறார்.' - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை, புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புலியகுளம் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவிவந்தது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, இன்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பம்ப்பிங் ஸ்டேஷன் கட்டி மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தமிழகத்தில் மருந்து சப்ளையில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் முதல்வரின் வீட்டில் இருக்கும் மிக முக்கிய உறுப்பினர் ஒருவர் தனியாக அழைத்துப் பேசுகிறார். இவ்வளவு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை சப்ளை செய்ய முடியும் என்கின்றனர். இருக்கும் மருந்தைத்தான் எழுதிக் கொடுக்க வேண்டும்.

உயிர் காக்கும் மருந்து
உயிர் காக்கும் மருந்து
கோப்புப்படம்

இல்லாத மருந்தை எழுதிக் கொடுக்கக் கூடாது என அரசு மருத்துவர்களுக்கு மறைமுகமாக அரசு மிரட்டல் விடுக்கிறது. உயிர் காக்கும் மருந்தில் அரசியல் செய்து, நோயாளிகளின் உயிருக்கே வேட்டுவைக்கும் செயல் இது. தவற்றைச் சுட்டிக்காட்டினால் அதைச் செய்யவேண்டிய அரசு, அதைச் செய்யாமல், அந்தத் திட்டத்தையே இல்லாமல் செய்கிறது.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. என்ன அரசாங்கம் இது... ஒவ்வொரு துறையிலும் உள்ள குடும்ப ஆதிக்க சக்தியின் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில்தான் சொத்துகளை பாகம் பிரிப்பார்கள். முதல்வரின் குடும்பத்தில் அதேபோல 10 துறைகள் மகனுக்கு, 10 துறைகள் மருமகனுக்கு என்ற நிலையில்தான் அரசாங்கம் நடக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாட்டைக் கூறுபோட்டு பாகம் பிரிக்கின்றனர். மருமகன் சொல்லித்தான் மருந்து சப்ளை நிறுவனத்திடம் பேசுவதாக வெளிப்படையாகச் சொல்கின்றனர்” என்றார்.