Published:Updated:

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பெற்றோர் போலீஸில் புகார்!

உயிரிழப்பு ( சித்திரிப்புப் படம் )

மஞ்சள் காமாலைக்காக நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பெற்றோர் போலீஸில் புகார்!

மஞ்சள் காமாலைக்காக நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Published:Updated:
உயிரிழப்பு ( சித்திரிப்புப் படம் )

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள தைலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவரின் 10 வயது மகன், தைலாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுவனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது மஞ்சள் காமாலை என அறிந்த பெற்றோர், கடந்த 19-ம் தேதியன்று விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் பகுதியில், காந்திமதி என்பவரிடம் காலை 8:00 மணி அளவில் நாட்டு மருந்து வாங்கி சிறுவனுக்கு கொடுத்துள்ளனர். அதன் பின்னர் வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு
உயிரிழப்பு
Representational Image

இதனால் பதட்டமடைந்த பெற்றோர், சிறுவனை புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், நாட்டு மருந்து சாப்பிட்டதால்தான் சிறுவன் உயிரிழந்ததாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் வளவனூர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சந்தேக மரணம் எனும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.