Published:Updated:

விழுப்புரம்: பசிக் கொடுமையால் உயிரிழந்த 5 வயது சிறுவன்? தீவிர விசாரணையில் தனிப்படை போலீஸ்!

தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன்!
News
தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன்!

சிறுவன் தண்ணீர், உணவின்றி பசியால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், சிறுவனை அடையாளம் காணும் முயற்சியில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குத் தனிப்படை காவல்துறையினர் விரைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரத்தில், சென்னை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியின் மீது 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார் (45). கடந்த 20 வருடங்களாக, சென்னை செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக மேலத்தெரு எனும் இடத்தில் தள்ளுவண்டியில் இஸ்திரி போட்டுவருகிறாராம். இவரது வண்டியின் மீது கடந்த 15-ம் தேதி காலையில் சிறுவன் ஒருவன் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறான்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

சிறுவன் உறங்கிக்கொண்டிருக்கலாம் என நினைத்த அக்கம் பக்கத்தினர், அவனை ௭ழுப்புவதற்கு முயன்றனர். அப்போது சிறுவனிடமிருந்து எவ்விதமான உணர்ச்சியும் வெளிப்படாததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்தபோது, குழந்தை இறந்தநிலையில் கிடப்பது தெரியவந்திருக்கிறது. உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், குழந்தை படுகொலை செய்யப்பட்டு தள்ளுவண்டியில் வீசப்பட்டானா என்ற சந்தேகக் கோணத்தில் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் அணியும் சீருடையை அந்தக் குழந்தையும் அணிந்திருந்ததால், அவனுடைய புகைப்படத்தை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகளுக்கும் அனுப்பி அடையாளம் காணும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தச் சிறுவன் குறித்த விவரம் தெரியாமல் இருந்ததுவந்தது. இந்த நிலையில் உயிரிழந்த சிறுவன் இரு தினங்களாக உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பசியில் உயிரிழந்திருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
தே.சிலம்பரசன்

இந்த 5 வயது குழந்தையை, இதுவரையிலும் யாரும் உரிமை கோராத நிலையில், சிறுவன் யார் என அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

சிறுவனை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீஸார் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இரு தினங்களாக உணவு, தண்ணீர் இன்றி கொடும் பசியில் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.