Published:Updated:

பூம்புகார்: காவிரியில் தரைப்பாலம் மூழ்கிப் போக்குவரத்து துண்டிப்பு - பரிதவிக்கும் 5 கிராம மக்கள்

தரைப்பாலம் மூழ்கிப் போக்குவரத்து துண்டிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூர் - வாணகிரி செல்லும் சாலையில் காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால் மக்கள் போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக தரைப்பாலம் போடப்பட்டிருந்தது.

பூம்புகார் அருகே காவிரி ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஐந்து கிராம மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தரைப்பாலம் மூழ்கிப் போக்குவரத்து துண்டிப்பு
தரைப்பாலம் மூழ்கிப் போக்குவரத்து துண்டிப்பு

மேட்டூர் அணை நிரம்பியிருப்பதால் உபரிநீர் திறக்கப்பட்டு தண்ணீர் அதிக அளவில் வருவதால், கொள்ளிடம், காவிரி ஆறுகளின் வழியே வங்கக் கடலுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூர் - வாணகிரி செல்லும் சாலையில் காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால் மக்கள் போக்குவரத்துக்காக தற்காலிகமாகத் தரைப்பாலம் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவிரி ஆற்றில் கடைசி கதவணையிலிருந்து திடீரெனத்  தண்ணீர் திறக்கப்பட்டதால், இந்த பாலம்  தண்ணீரில் மூழ்கி சாலை வசதி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாணகிரி, கீழப்பெரும்பள்ளம், ஏராம்பாளையம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த வழியாகச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சிலர் அதிக அளவில் தண்ணீர் செல்வதை பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனத்தில் உயிரைப் பணயம்வைத்து ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்குச் செல்வோர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் நவகிரக் கோயில்களில் ஒன்றான கேதுபகவான் வீற்றிருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீநாகநாதசுவாமி தலத்துக்கு வரும் வெளியூர் பக்தர்களும் சாலை வசதி இல்லாமல் ஏமாற்றத்துடன்  திரும்பிச்  செல்கின்றனர்.

தரைப்பாலம் மூழ்கிப் போக்குவரத்து துண்டிப்பு
தரைப்பாலம் மூழ்கிப் போக்குவரத்து துண்டிப்பு

எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.