Election bannerElection banner
Published:Updated:

கோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்!' - கௌதமி நம்பிக்கை

கௌதமி
கௌதமி

`சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்’ என்று கௌதமி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு அரசியல் களத்தைச் சூடுபிடிக்க வைத்திருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் முனைப்பு காட்டிவருகின்றன. அ.தி.மு.க - பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

பா.ஜ.க பேரணி
பா.ஜ.க பேரணி
``அ.தி.மு.க-வினர் பா.ஜ.க அரசையே கலாய்க்கிறார்கள்!'' - சொல்கிறார் தங்கம் தென்னரசு

இந்தநிலையில், பா.ஜ.க-வினர் கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து சிவானந்தா மில்ஸ் வரை 400-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர். பா.ஜ.க கொடி, தாமரை சின்னம் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணியை பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான கெளதமி தொடங்கிவைத்தார். இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை.

பா.ஜ.க கௌதமி
பா.ஜ.க கௌதமி

பேரணியில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், ``வரக்கூடிய நாள்கள் ஒவ்வொன்றும் நமக்கு முக்கியம். தாமரை மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்காக உழைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதை லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்“ என்றார்.

இதையடுத்துப் பேசிய கௌதமி, ``ஒளியமான எதிர்காலத்துக்காக இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். எந்த வேட்பாளர், எந்தத் தொகுதியில் நின்றாலும் நம் கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி,

கௌதமி, வானதி சீனிவாசன்
கௌதமி, வானதி சீனிவாசன்

``தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருப்பது பொன்னான எதிர்காலத்துக்கு முதற்படி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிய நேரம் எடுத்தாலும், விரைவில் முடிவு எடுக்கப்படும்“ என்று கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு