Published:Updated:

சோழப் பேரரசின் சரித்திரத்தை தங்கத்தால் அலங்கரிக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ப்ரிஹா என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சோழப் பேரரசு மற்றும் அதன் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட தங்க நகைகளின் நேர்த்தியான வடிவமைப்புகளைக் கொண்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லரின் புதிய கலெக்சன் ஆகும்.

சோழப் பேரரசின் சரித்திரத்தை தங்கத்தால் அலங்கரிக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

ப்ரிஹா என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சோழப் பேரரசு மற்றும் அதன் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட தங்க நகைகளின் நேர்த்தியான வடிவமைப்புகளைக் கொண்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லரின் புதிய கலெக்சன் ஆகும்.

Published:Updated:
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

பாரம்பரிய நகைகள் உண்மையிலேயே தலைமுறைகளைக் கடந்து வந்த ஒரு கலை இன்று அது மகத்தான பெருமையுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நமது இந்திய மரபுகள் மற்றும் மதிப்புகள் மீது உறுதியான நம்பிக்கையுடன் தென்னிந்தியாவின் முதன்மையான நகை பிராண்டுகளில் ஒன்றான ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், 1964 முதல் தனித்துவமான, பாரம்பரிய மற்றும் நவீன நகைகளை உருவாக்கும் கைவினையில் முன்னணியில் உள்ளது.

ப்ரிஹா என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சோழப் பேரரசு மற்றும் அதன் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட தங்க நகைகளின் நேர்த்தியான வடிவமைப்புகளைக் கொண்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லரின் புதிய கலெக்சன் ஆகும். பிரகதீஸ்வரர் கோவிலிலும், சோழர்கால கட்டிடக்கலையின் அழகிய பழங்கால வடிவங்களிலும் இந்த தனித்துவமான அணிவகுப்பின் அழகிய அற்புதமான வடிவமைப்புகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. ப்ரிஹா கலெக்சன்கள் திறமையான கைதேர்ந்த கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான நகைகளைக் கொண்டுள்ளது மேலும் இந்திய வரலாற்றில் சோழப் பேரரசின் கலை மற்றும் கட்டிடக்கலையின் சுருக்கமான நவீன கால மொழிபெயர்ப்பாகும்.

ப்ரிஹா கலெக்சன்கள் பற்றி ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜிஆர் அனந்தி' அனந்தபத்மநாபன் பேசுகையில் "மாபெரும் சோழப் பேரரசு நமது நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல நமது மரபார்ந்த விழுமியங்களிலும் ஒரு பொற்காலத்தைக் குறிக்கிறது ஜிஆர்டி ஜூவல்லர்ஸில், பாரம்பரிய மதிப்புகளை நிலைநிறுத்துவதையும், நமது வரலாற்றை மறுபரிசீலனை செய்வதையும் உறுதியாக நம்புகிறோம். பிரத்யேகமான பிரிஹா கலெக்ஷனை வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாகக் கையாள்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அருகிலுள்ள ஜிஆர்டி ஷோரூம்களை பார்வையிட்டு. ப்ரிஹா கலெக்சன்கள் மூலம் நிகழ்காலத்தில் நமது கடந்த காலத்தின் நேர்த்தியையும் அழகையும் காணும்படி அனைவரையும் அழைக்கிறோம்" என்று கூறினார்.

மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் சிறந்த கைவினை நகைகளை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம். எங்களின் பிரத்யேக அணிவகுப்பான ப்ரிஹா பல்வேறு விதமான தருணங்களை அலங்கரிக்கும் வகையில் அழகிய வசீகரமான வடிவமைப்புகளை வழங்க எங்கள் விருப்பங்களையும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் ஒருங்கிணைக்கிறது சோழப் பேரரசின் மகத்துவத்தையும் அவர்களின் கட்டிடக்கலையையும் எங்கள் ப்ரிஹா கலெக்சன்களில் அனைவரும் நேரில் கண்டு புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்" என்று கூறினார்.