Published:Updated:

நெல்லை: விபத்து நடந்த சாஃப்டர் பள்ளிக்கு அருகிலேயே ஆபத்தான சுற்றுச்சுவர்! - கவனிக்குமா அரசு?

திருநெல்வேலி
News
திருநெல்வேலி

சுவர் இடிந்து விழுந்து விபத்து நடந்து மாணவர்கள் பலியான நெல்லை டவுண் சாஃப்டர் பள்ளிக்கு மிக அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது.

சமீபத்தில் திருநெல்வேலி டவுண் சாஃப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் 4 மாணவர்கள் பலத்த காயமும் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டடங்களை ஆய்வுசெய்து தரமற்ற முறையில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்ற மாவட்டம் தோறும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

நெல்லை: விபத்து நடந்த சாஃப்டர்  பள்ளிக்கு அருகிலேயே ஆபத்தான சுற்றுச்சுவர்! - கவனிக்குமா அரசு?

பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய குழு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் உடைந்துவிழும் நிலையிலிருந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு தரமற்ற பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விபத்து நடந்து மாணவர்கள் பலியான நெல்லை டவுண் சாஃப்டர் பள்ளிக்கு மிக அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்துவிழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

நெல்லை: விபத்து நடந்த சாஃப்டர்  பள்ளிக்கு அருகிலேயே ஆபத்தான சுற்றுச்சுவர்! - கவனிக்குமா அரசு?

பள்ளிகளை ஆய்வுசெய்யச் செல்லும் மாவட்ட கல்வி அலுவலர் அடங்கிய குழுவினர், மாவட்ட கல்வி அலுவலகத்தை கவனிக்காமல் விட்டது ஆச்சர்யம் தான். மேலும் அரசு அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் விபத்து நடந்த பள்ளியை தான் ஆய்வு செய்தனர். மேற்கொண்டு அது போன்ற துயர சம்பவம் நடைபெறாமல் இருக்க, மோசமான இடிந்து விழக்கூடிய நிலையில் இருக்கும் கட்டடங்களையும் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது!