Published:Updated:

மதுரை: மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பயணிகளைப் பாதுகாத்த டிரைவர்! - நடந்தது என்ன?

ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
News
ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

``டிரைவர்களுக்கு ஓய்வில்லாமல் பணி வழங்கப்படுகிறது. டிரைவர் ஆறுமுகத்துக்கு மதுரை டு கொடைக்கானல், அதைத் தொடர்ந்து மதுரை டு திருப்பூர் என தொடர்ந்து டூட்டி கொடுத்துவந்தார்கள்” என்கிறார்கள்.

தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தி 30 பயணிகளைக் காப்பாற்றிய ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவர் ஆறுமுகம்
டிரைவர் ஆறுமுகம்

மதுரை மாவட்டம், செக்கானூரணியைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகம், அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர்க் கிளையில் டிரைவராகப் பணியாற்றிவருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்று காலை கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்தை இயக்கிய அவர், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பினார். கொடைக்கானலுக்குக் கிளம்பிய ஐந்து நிமிடங்களில், பைபாஸ் சாலையில், குரு தியேட்டர் சிக்னலுக்கு அருகே திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சீரியஸான நிலைக்குச் சென்றிருக்கிறார்.

மாரடைப்பு
மாரடைப்பு

அந்த மோசமான உடல்நிலையிலும் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்று பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் சீட்டிலயே மயங்கியிருக்கிறார்.

அதன் பிறகு பேருந்திலிருந்த பயணிகள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லாமல் அவர் மரணமடைந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனக்கு இப்படி நேர்ந்தும் மற்ற பயணிகளைப் பாதுகாத்துக் காப்பாற்றிய டிரைவர் ஆறுமுகத்தின் செயலை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பேசிவருகிறார்கள்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

இந்தச் சம்பவம் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

``டிரைவர்களுக்கு ஓய்வில்லாமல் பணி வழங்கப்படுகிறது. டிரைவர் ஆறுமுகத்துக்கு மதுரை டு கொடைக்கானல், அதைத் தொடர்ந்து மதுரை டு திருப்பூர் என தொடர்ந்து டூட்டி கொடுத்துவந்தார்கள். இதுபோல அனைத்துத் தொழிலாளர்களுக்கும் டூட்டி கொடுக்கப்படுகிறது. இதனால், சரியான ஓய்வு கிடைக்காமல், தூக்கம் இல்லாமல் உடல்நலம் கெட்டு, மன அழுத்தத்துடன் பணியாற்றும் சூழல் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவருகிறது" என்றனர் சில தொழிலாளர்கள். தங்கள் பிரச்னையைப் பற்றிப் பேசி ஆடியோ மெசேஜாகவும் வெளியிட்டுள்ளனர்.