Published:Updated:

`அசம்பாவிதம் தவிர்க்க, இடித்துத் தள்ளுங்கள்'-சீரமைக்கப்படுமா திருவாரூர் நகராட்சி பேருந்து நிறுத்தம்?

ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்
News
ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்

இந்தப் பேருந்து நிறுத்த நிழற்குடை திருவாரூர் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்ட நிதியில் 2009-2010-ல் கட்டப்பட்டிருக்கிறது. அதன் பிறகு புனரமைப்புப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலை வழியில் கிடாரங்கொண்டான் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துவது திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்தான்.

ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்
ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்

அந்தக் கல்லூரிக்கு எதிரேதான் கிடாரங்கொண்டான் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தை தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். கல்லூரி மாணவர்கள் தங்களின் ஊர்களுக்குச் செல்ல இங்கு வந்துதான் பேருந்தில் ஏறி திருவாரூர் பேருந்து நிலையத்தை அடைந்து ,அவரவர் ஊர்களுக்குச் செல்ல முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்
ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்

அதனால் எப்போதும் இந்தப் பேருந்து நிறுத்தம் பரபரப்பாக இருக்கும். ஆனாலும், இந்தப் பேருந்து நிறுத்தம் பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் இருக்கிறது. கூரைகளிலிருந்து கான்கிரீட் உதிர்ந்து, துருப்பிடித்த கம்பிகள் நீண்டு நிற்கின்றன. எந்தக் கணம் வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் இருக்கிறது இந்த பஸ் ஸ்டாண்ட்.

நாகபட்டினத்திலிருந்து திருவாரூர் நோக்கிப் பயணிக்கும் வழியில் கல்லூரி மதில் சுவருடன் ஒட்டியிருக்கிறது மற்றொரு பேருந்து நிறுத்தம். இதுவும் ஓடுகள் பெயர்ந்தும், தரைகள் சிதிலமடைந்தும் காட்சியளிக்கிறது. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல்போல கொடிகளுக்கு திருவாரூர் நகராட்சி, பேருந்து நிறுத்தத்தின் மூலம் இடம் கொடுத்திருக்கிறது என பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள். பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி ஆமணக்குச் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி, பராமரிப்பின்றி இருக்கிறது.

ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்
ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்

இந்தப் பேருந்து நிறுத்த நிழற்குடை, திருவாரூர் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்ட நிதியில் 2009-2010-ல் கட்டப்பட்டிருக்கிறது. அதன் பிறகு புனரமைப்புப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மழைக் காலங்களில் பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நிற்கக்கூட முடியாமல் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். கல்லூரி நாள்களில் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள் போதிய இடவசதியின்றி சாலை முழுவதும் கூட்டமாக நிற்பதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் ஏற்படும் அபாயமும் அவ்வப்போது ஏற்படுகிறது.

பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தம்

இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என்பதும், அதற்கு முன்னதாக அசம்பாவிதம் நிகழா ண்ணம் சிதிலமடைந்திருக்கும் பேருந்து நிறுத்ததை இடித்துத் தள்ள வேண்டும் என்பதும் மாணவர்கள் மற்றும் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.