Published:Updated:

"பஸ்ஸே நிக்காத ஊருக்கு பஸ் ஸ்டாப் எதற்கு?" - கொந்தளிக்கும் நாவினிப் பட்டி கிராம மக்கள்!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நாவினிப்பட்டி என்னும் ஊரில், சுமார் 5000-க்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர். அந்தப் பகுதி மாணவ, மாணவிகள் மதுரைக்கும் காரைக்குடிக்கும் சென்று படிக்கும் சூழல்தான் இருக்கிறது.

பேருந்து நிறுத்துமிடம்
பேருந்து நிறுத்துமிடம்

பஸ் பாஸில் பள்ளிக்குப் பயணம் செய்யும் மாணவர்கள், 1000 ரூபாய் பாஸில் வேலைக்குச் சென்றுவரும் நடுத்தர வர்க்கத்தினர் இன்றும்கூட அரசுப் பேருந்தை நம்பியே வாழ்ந்துவருகிறார்கள். காலையில் பள்ளிக்கோ வேலைக்கோ செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, பேருந்துகள் நிற்காமல் சென்று, அதனால் தாமதம் ஏற்பட்டால், அந்த நாள் முழுவதும் அதன் பாதிப்பு இருக்கும். எது ஒன்றிலும் சரியாகக் கவனம் செலுத்தமுடியாது. இப்படிப் பல நாள்கள் தொடர்ந்தால், அந்த நபரின் வளர்ச்சி தேக்கநிலையைத்தான் எட்டும். அப்படி ஒரு கிராமமே பாதிப்புள்ளாகிக்கொண்டிருக்கும் அவலம், மேலூரை அடுத்துள்ள நாவினிப்பட்டியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தம்
Vikatan

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நாவினிப்பட்டி என்னும் ஊரில், சுமார் 5000-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி மாணவ, மாணவிகள் மதுரைக்கும் காரைக்குடிக்கும் சென்று படிக்கும் சூழல்தான் இருக்கிறது. பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்களும் வியாபாரிகளும் நகரை நோக்கிதான் வரவேண்டும். அப்பகுதி மக்கள், தங்கள் போக்குவரத்திற்காகப் பேருந்தையே நம்பியுள்ள நிலையில், எந்த ஓர் அரசுப் பேருந்தும் நாவினிப்பட்டியில் நின்று செல்வதில்லை. எப்போதாவது தனியார் பேருந்து மட்டும் நிற்கும். அதுவும் பேருந்தில் ஆளே இல்லாத சூழ்நிலையில் மட்டுமே!

மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற வெளியூருக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால், கிராம மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது. அப்பகுதி மக்களின் வேண்டுதலுக்கிணங்க பேருந்து நிறுத்தத்தை கட்டிக்கொடுத்தது அரசு. பேருந்து நிறுத்தம் கட்டி என்ன பயன், அரசுப் பேருந்து ஒன்றுகூட நாவினிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை. சில முக்கிய ஊர்களுக்குச் செல்லும் மிக முக்கிய சாலையாக இந்த நாவினிப்பட்டி சாலை உள்ளது. ஆனால், இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் போக விரும்பும் ஊருக்கு நேரடியாகப் பேருந்து ஏற முடியாது. மதுரைக்கு அருகிலுள்ள மேலூருக்கு வந்து, பின் மேலூரிலிருந்து பேருந்து ஏறி மீண்டும் அவர்களின் ஊர் வழியே மற்ற ஊர்களுக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால், அம்மக்களின் பொருளாதாரமும் நேரமும் வீணாகின்றன.

கடிதம்
கடிதம்
`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

''இரவு நேரத்தில், காரைக்குடியிலிருந்து கல்லூரி முடித்து பெண்கள் வீட்டுக்கு வந்தால்கூட, மேலூர் வந்து இறங்கி, பின்னர் மேலூரிலிருந்து மீண்டும் எங்கள் ஊருக்கு வர வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், அப்பேருந்து எங்கள் ஊர் வழியாகத்தான் மேலூருக்குச் செல்கிறது. எங்கள் கிராமத்தின் முக்கிய சாலை வழியாகச் செல்லும் அனைத்து பேருந்துகளும் எங்கள் கிராமத்தில் ஒரு நிமிடம் நின்று சென்றால்கூட, எங்கள் மக்களின் நேரமும் பொருளாதாரமும் பாதுகாக்கப்படும்!'' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மதுரையிலிருந்து இக்கிராமம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள், காலியாகச் செல்லும் நிலையில்கூட, கிராம மக்களை ஏற்றுவதில்லை என்றும் திருப்பத்தூர், காரைக்குடியில் இருந்து வரக்கூடிய பேருந்துகள், கிராம நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால், மேலூர் வரை சென்று திரும்புவதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 80 வரை செலவாகும். ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டுமென்றால்கூட அருகில் உள்ள மேலூருக்கு ஆட்டோவில் செல்ல வேண்டியதாக உள்ளது. காரைக்குடி மண்டலப் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்வதற்கான ஒப்புதலை, போக்குவரத்து அதிகாரிகளிடம் ஊர்மக்கள் பெற்ற பின்பும் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.

கடிதம்
கடிதம்

குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் வரை ஒரு ஸ்டேஜ் அமைப்பது சட்டம் என்கின்றனர். அந்த 5 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் பேருந்துகளை நிறுத்த வேண்டுமென அலுவலர்களும் பேருந்து ஊழியர்களும் கூறுகின்றனர். பேருந்து நிறுத்தம் இருந்தும் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எங்கள் கிராம மக்களின் போக்குவரத்து கஷ்டம் குறையும் என வருத்தத்தோடு தெரிவிக்கிறார்கள், அவ்வூர் மக்கள். மக்களின் பொருளாதாரத்தையும் நேரத்தையும் பெண் பிள்ளைகளின் நலனையும் கருத்தில்கொண்டு, அரசுப் பேருந்துகளை நாவினிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தினால், அம்மக்களின் போக்குவரத்து அலைச்சல் குறைவதோடு, பல்வேறு வகையில் அப்பகுதி மக்களின் வாழ்வும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.