Published:Updated:

`இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை!' -ஊர்க்காவல்படை வீரர்களை நெகிழவைத்த தொழிலதிபர்

ஊர்க்காவல்படை
ஊர்க்காவல்படை

தமிழகத்தில் ஊர்க்காவல் படையில் சுமார் 14,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். சேலம் மாவட்ட முழுவதும் 620 பேர் பணியில் இருக்கிறார்கள். சேலம் நகரப் பகுதியில் மட்டும் 320 பேர் இருக்கிறார்கள்.

''இந்த அசாதாரண சூழ்நிலையில் காவல்துறையோடு இணைந்து ஊர்க்காவல்படையினரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஊர்க்காவல் படையினருக்கு மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி கொடுக்கப்பட்டு மாதம் வெறும் 2500 ரூபாய் ஊதியம் வழங்குகிறார்கள். இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவது மிகவும் கடினம். அடித்தட்டு மக்களைப் போல இவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்''

ஊர்க்காவல்படை
ஊர்க்காவல்படை

சேலம் விஜயஶ்ரீ பில்டர்ஸ் உரிமையாளரும், கோவை மண்டல ஊர்க்காவல்படையின் கெளரவ உதவித் தலைவராகவும் இருப்பவர் இராஜேந்திரன். இவர் தன் சொந்த செலவில் 3 1/2 லட்சம் மதிப்பீட்டில் ஊர்க்காவல் படையினருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மாஸ்க், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல்துறை முன்னிலையில் வழங்கினார். இது சேலம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல்படையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுள்ளது.

இதுபற்றி இராஜேந்திரனிடம் பேசிய போது, ''கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு விதித்திருக்கும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசும், பல தொண்டு நிறுவனங்களும் மற்றும் தன்னார்வலர்களும் தன்னிச்சையாகக் களத்தில் இறங்கி மக்களுக்குப் பல உதவிகளைச் செய்து வருகிறார்கள். இது அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ வைத்து வருகிறது.

தமிழகத்தில் ஊர்க்காவல் படையில் சுமார் 14,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். சேலம் மாவட்ட முழுவதும் 620 பேர் பணியில் இருக்கிறார்கள். சேலம் நகரப் பகுதியில் மட்டும் 320 பேர் இருக்கிறார்கள். இந்த அசாதாரண சூழ்நிலையில் காவல்துறையோடு இணைந்து ஊர்க்காவல்படையினரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஊர்க்காவல் படையினருக்கு மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி கொடுக்கப்பட்டு மாதம் வெறும் 2500 ரூபாய் ஊதியம் வழங்குகிறார்கள். இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவது மிகவும் கடினம். அடித்தட்டு மக்களைப் போல இவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இராஜேந்திரன்
இராஜேந்திரன்

மக்கள் பணிச் செய்யக் கூடிய இவர்கள் துவண்டு போய் விடாமல் தொடர்ந்து மக்களுக்குப் சிறப்பாக பணியாற்ற வேண்டும். சேலம் நகரத்தில் உள்ள 320 ஊர்க்காவல் படையினருக்கு என்னுடைய சொந்த செலவில் 3 1/2 லட்சத்திற்கான மதிப்பீட்டில் உதவிகள் செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை வழங்கி இருக்கிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு