Published:Updated:

``எங்களை மீட்க வந்திருக்கிறீர்களா... Carry-on Thanks!'' - கேப்டன் வருண் சிங் பேசிய வார்த்தைகள்!

வருண் சிங்
News
வருண் சிங்

அவரே தன் பெயரை 'வருண்' என்று சொல்லிப் பேசினார். அவர் முகத்திலும், உடலிலும் ஆங்காங்கே முட்கள் இருந்தன. `அதை எடுத்துவிட முடியுமா?’ என்று கேட்டார்.

கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்திலிருந்து, குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்துக்குப் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் நான்கு பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம்காணப்பட்டிருக்கின்றன. ஒன்பது பேரின் உடல்களை இதுவரை அடையாளம்காண முடியவில்லை. பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கின்றன. மற்ற உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்துவிட்டன.

வருண் சிங்
வருண் சிங்

இப்படிப்பட்ட கோர விபத்தில் ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். குரூப் கேப்டன் அதிகாரியான வருண் சிங் காயங்களுடன் மீட்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், மீட்புப்பணி குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து மீட்புப்பணியின் போது சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுகையில், ``நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது ஹெரிகாப்டரில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. மூன்று அதிகாரிகள் மிகவும் ஆபத்தான நிலையில் பலத்த தீக்காயங்களுடன் வெளியில் இருந்தனர். அவர்களை முதலில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர்களில் ஒருவர்தான் வருண் சிங். தீக்காயங்கள் பலமாக இருந்தாலும், அவர் சற்றே சுயநினைவுடன்தான் இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரே தன் பெயரை 'வருண்' என்று சொல்லிப் பேசினார். அவர் முகதிலும் உடலிலும் ஆங்காங்கே முட்கள் இருந்தன. அதை எடுத்துவிட முடியுமா என்று கேட்டார். நாங்கள் எடுத்துவிட்டோம். பிறகு, 'எங்களை மீட்க வந்திருக்கிறீர்களா?' என்று ஆங்கிலத்தில் கேட்டார். 'ஆம்... இன்னும் சில நிமிடங்களில் உங்களை பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்துவிடுவோம் . தைரியமாக இருங்கள்' என்று கூறினோம்.

'Carry-on... Thanks' என்று மட்டும் சொன்னார். அதன் பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டோம். முடிந்தவரை எல்லாரையும் காப்பாற்றிவிட நினைத்தோம். அது முடியவில்லை என்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எங்களால் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. வருண் சிங்காவது மீண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே பிரார்த்தனை" என்றனர்.

மீட்புப்பணி
மீட்புப்பணி

வருண் சிங்கை, மீட்புப்பணியிலிருந்த அதிகாரிகளை தவிர, உள்ளூர் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ``அந்த நிலையிலும்கூட அவர் எங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். அவர் எப்படியாவது குணமாகி வர வேண்டும். அவர் குணமாகி வந்த பிறகு, எங்கிருந்தாலும் அவரைச் சென்று பார்ப்போம்" என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.