Published:Updated:

நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் தீப்பற்றி எரிந்த கார்... அதிர்ஷ்டவசமாகத் தப்பிய பயணிகள்!

தீப்பற்றி எரியும் கார்

ஊட்டிக்குச் சென்றுகொண்டிருந்தபோது 4-வது கொண்டை ஊசி வளைவு அருகில் காரிலிருந்து திடீரெனப் புகை எழுந்திருக்கிறது. இதனால் காரை நிறுத்திவிட்டு அனைவரும் வெளியேறியுள்ளனர். கார் தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்திருக்கிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இன்று காலை மசினகுடியிலிருந்து ஊட்டியை நோக்கி கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணித்துள்ளனர். 4-வது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் சென்றுகொண்டிருந்தபோது காரின் முன் பகுதியிலிருந்து திடீரென புகை எழுந்திருக்கிறது. உடனடியாகக் காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு, காரிலிருந்த ஐந்து பேரும் கீழே இறங்கியுள்ளனர். அப்போது, கார் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்திருக்கிறது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமானது.

தீப்பற்றி எரியும் கார்
தீப்பற்றி எரியும் கார்

இது குறித்து பேசிய சுற்றுலாப்பயணிகள், "பெங்களூரிலிருந்து இந்த காரை வாடகைக்கு எடுத்துவந்தோம். மலைப் பாதை என்பதால் காரின் இன்ஜின் அளவுக்கு அதிகமாகச் சூடாகியிருக்கிறது. திடீரென தீப்பிடித்து எரிந்துவிட்டது. சுமார் ஒரு மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை நல்லவேளையாக காரில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டோம்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism