Published:Updated:

`கொரோனா குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு!’ -வி.ஏ.ஓ-வை தேடும் திருவண்ணாமலை காவல்துறை

மாலிக் அலி
மாலிக் அலி

கொரோனா நோய் பரவுவது குறித்து ஊடகங்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றம் செய்யத் தூண்டும் விதமாகவும், ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக வி.ஏ.ஓ மீது வழக்கு பதிவுசெய்து, அவரைத் தேடி வருகிறது காவல் துறை.

நாடெங்கும் கொரோனா நோய்த்தோற்று நாளுக்குநாள் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், கொரோனவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதேபோன்று, சமூக வலைதளங்களில், கொரோனா குறித்து வீண் வதந்திகள் மற்றும் அவதூறுகள் பரவி விடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களைத் தீவிரமாக கண்காணிக்கிறது அரசு.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், தூசி அடுத்த ஆக்கூர் கிராம நிர்வாக அதிகாரி மாலிக் அலி என்பவர், `கொரோனா நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இஸ்லாம் சமூகத்தினரைக் குற்றம் செய்யத் தூண்டும் விதமாக உள்நோக்க கருத்துகளுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்’ என்று அவர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை.

`கொரோனா குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு!’ -வி.ஏ.ஓ-வை தேடும் திருவண்ணாமலை காவல்துறை

உலகெங்கும் கொரோனா பரவிக்கொண்டிருக்கும்போது நம் நாட்டில் மட்டும் இந்த நிகழ்ச்சிகளுக்கு வெளிநாட்டினர் வர அனுமதி கொடுத்தது யார் என தொடங்கும் ஃபேஸ்புக் பதிவில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் மாலிக் அலி. இந்தப் பதிவைப் பதிவிட்ட சில மணி நேரத்துகுள் தூசி காவல் நிலையத்துக்குத் தகவல் சென்றிருக்கிறது. இதற்கிடையே, மாலிக் அலி தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது சம்பந்தமாக அவதூறு பரப்பியதாக கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) மாலிக் அலி மீது, இந்தியத்தண்டனை சட்டம் 269 கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்வதற்குத் தேடி வருகிறனர் காவல்துறையினர்.

`இத்தாலியிலிருந்து வந்த மகன்; புகைப்படத்துடன் பரவும் வதந்தி!’ -கலங்கும் பேராவூரணி பெற்றோர்

அரசுப் பதவியில் இருக்கும் அதிகாரியே சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பலாமா என்று கண்டனங்களும் எழுந்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு