Published:Updated:

நாகை: `கழிவுநீர் ஓடிய வாய்க்காலில் காவிரி நீர்!’ - கிராம இளைஞர்களின் பெருமுயற்சி

கழிவுநீர்
கழிவுநீர்

இந்த ஆக்ரமிப்புகளை அகற்றி வாய்க்காலைத் தூர்வாரினால் எங்கள் பகுதியிலுள்ள 5-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர்த் தேவை முழுமையாகப் பூர்த்தியடையும்.

நாகை மாவட்டம் புத்தூரை அடுத்த மஞ்சக்கொல்லைக் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டபோதும் அந்தக் கிராமத்துக்குத் தண்ணீர் வந்தபாடு இல்லை.

கழிவுநீர்
கழிவுநீர்

இதற்குக் காரணம் வாய்க்கால் தூர்ந்துபோய் இருப்பதுதான் என்பதை உணர்ந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி வாய்க்காலைத் தூர்வார முடிவு செய்தனர். அனைவரும் தங்களது சொந்த முயற்சியில் நிதி திரட்டி தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை: `கடைமடை பகுதிகளுக்கு வராத காவிரி நீர்’ - குறுவை சாகுபடி விவசாயிகள் வேதனை

இதுபற்றி அப்பகுதி இளைஞர்கள் சிலரிடம் பேசினோம்.``வாய்காலின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி அகலத்தில் இருந்த வாய்க்கால் தற்போது ஆக்கிரமித்து பலர் கட்டடங்களைக் கட்டியிருப்பதால் 2 அடிக்கும் குறைவாக சுருங்கி விட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலைத் தூர்வாரினால் எங்கப் பகுதியிலுள்ள பாய் குளம், செட்டிக்குளம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து எங்கள் கிராம மக்களுக்கு தண்ணீர்த் தேவை முழுமையாகப் பூர்த்தியடையும்.

கழிவுநீர்
கழிவுநீர்

இது தொடர்பாகப் பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு