Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது... அடுத்து என்ன?

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருண்குமார் என்ற இளைஞரை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு ஐந்து பேரும், கடந்த ஜனவரி மாதம் அ.தி.மு.க பிரமுகர் உட்பட மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்
Tamil News Today: `பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம்

இதற்கிடையே, கடந்த சில மாதங்களில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் புதிதாக சாட்சி சொல்லியிருந்தனர். இதனால், மேற்கொண்டு கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டுவந்தது.

பொள்ளாச்சி பணிக்கம்பட்டி என்றழைக்கப்படும் கிட்டசூரம்பாளையம் பகுதியிலுள்ள முருகானந்தம் என்பவரின் மகன் அருண்குமார். இவர் இந்த வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட சதீஷ்குமாருடன் இணைந்து துணிக்கடை நடத்திவந்தார். சதீஷ்குமார் சிறைக்குச் சென்றதும், கடையை இவர்தான் முழுமையாக நடத்திவந்திருக்கிறார்.

அருண்குமார்
அருண்குமார்

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் அருண்குமாரும் தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்ததாகத் தகவல் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் அடிப்படையில் விசாரித்துவந்த சி.பி.ஐ., அருண்குமாரை நேற்று கைதுசெய்தது. இதையடுத்து, அவரை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

அருண்குமார்
அருண்குமார்

சி.பி.ஐ தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டிருப்பதால், மேலும் சில கைது நடவடிக்கைகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

Tamil News Today: `பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு