Published:Updated:

ராதா ரவியை அடுத்து அண்ணா நகர் எம்.எல்.ஏ... கொரோனா அச்சத்தில் ஊட்டிக்கு படையெடுக்கும் பிரபலங்கள்!

kothaigiri
kothaigiri

பிரபலங்கள் பலருக்கு ஊட்டியில் பங்களா உள்ளது. கொரோனாவிலிருந்து தப்பவும், கோடை வெயிலை சமாளிக்கவும் சிபாரிசில் இ-பாஸ் பெற்று வருகின்றனர்.

சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் ராதாரவியைத் தொடர்ந்து, கோத்தகிாி கேர்கம்பைப் பகுதிக்கு வந்துள்ள சென்னை அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனையும் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.

kothaigiri
kothaigiri

கோயம்பேடு தொடர்புடைய இரண்டு ஓட்டுநர்கள், அவர்களின் சகோதரி ஒருவர் என நீலகிரியைச் சேர்ந்த மொத்தம் மூன்று பேர் மட்டுமே கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சிறப்புக் குழுவினர் இரவு பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

kothaigiri
kothaigiri

கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற, ஓய்வின்றி இரவு பகலாகப் பணியாற்றிவருகின்றனர். இ-பாஸ் பெற்று நீலகிரிக்குள் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேபோகிறது. அதேபோல், பிரபலங்களும் கொரோனா தொற்றியிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள நீலகிரியை நோக்கி படையெடுக்கின்றனர்.

நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டு, யாரையும் தங்க அனுமதிக்ககூடாது என அறிவுறுத்தப்படுட்டுள்ளது‌. மீறி தங்கவைக்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுவருகின்றன.

kothaigiri
kothaigiri

இந்த நிலையில், இ-பாஸ் மூலம் அனுமதிபெற்று பலரும் தங்களது பங்களாக்களில் தங்குவதற்காக வருகின்றனர்.

சென்னையிலிருந்து, கோத்தகிரியில் உள்ள தனது பங்களாவிற்கு 8 நபர்களுடன் வந்த நடிகர் ராதாரவி, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார். அரசின் அறிவுறுத்தல்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராதாரவியையும் அவருடன் வந்தவர்களையும் வீட்டுத் தனிமையில் 14 நாள்கள் கண்காணித்துவருகின்றனர்.

kothaigiri
kothaigiri

தற்போது, சென்னை அண்ணா நகர் எம்.எல்.ஏ, அவரது உறவினர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் கோத்தகிரி கேர்க்கம்பை பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு தங்குவதற்கு வந்துள்ளார்.

இதை அறிந்த சுகாதாரத்துறையினா், அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று ஸ்டிக்கா் ஒட்டியுள்ளனா். 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்க தன்னாா்வலா்களை நியமித்துள்ளனா்.

kothaigiri
kothaigiri

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "பிரபலங்கள் பலருக்கு ஊட்டியில் பங்களா உள்ளது. கொரோனாவில் இருந்து தப்பவும், கோடை வெயிலை சமாளிக்கவும் சிபாரிசில் இ-பாஸ் பெற்று வருகின்றனர். கொரோனா ஹாட் ஸ்பாட்டில் இருந்து வருபவர்களைக் கண்காணித்து, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு ஸ்டிக்கர் ஒட்டி 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் கண்காணித்து வருகிறோம். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்கிறோம் மற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே எடுத்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு