Published:Updated:

``செல்போன் டவரைக் காணோம்!" - காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட பரபர புகார்

விளாத்திகுளம் காவல் நிலையம்

தூத்துக்குடியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாகக் கூறி, அந்நிறுவனத்தின் மேலாளர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பரபர புகார் அளித்துள்ளார்.

``செல்போன் டவரைக் காணோம்!" - காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட பரபர புகார்

தூத்துக்குடியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாகக் கூறி, அந்நிறுவனத்தின் மேலாளர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பரபர புகார் அளித்துள்ளார்.

Published:Updated:
விளாத்திகுளம் காவல் நிலையம்

தமிழ் திரைப்படம் ஒன்றில், ` கிணத்தை காணோம்’ என நகைச்சுவை நடிகர் வடிவேல்  காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுப்பதுபோல, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் செல்போன் டவரைக் காணோம் என புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. விளாத்திகுளம், அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு, காமராஜ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் பின்புறம் சொந்தமாக இடம் இருக்கிறது. இந்த நிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின்  செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது.

டவர் அமைக்கப்பட்டிருந்தகான்கிரீட்  தூண்
டவர் அமைக்கப்பட்டிருந்தகான்கிரீட் தூண்

இதற்காக  20  ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டு, அந்நிறுவனம், ராஜேந்திரனுக்கு ரூ.20 லட்சம்  கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லையாம்.  

செல்போன் டவர் அமைப்பதற்காக அங்கு கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தூண்கள் மட்டும் இருந்துள்ளன. இதைக் கண்டு திடுக்கிட்ட ஊழியர்கள், அந்நிறுவனத்தின் மேலாளருக்கு தகவல்  கூறியுள்ளனர். இது குறித்து அவர் நில உரிமையாளரான ராஜேந்திரனிடம் கேட்டபோது, டவரை கழற்றி விற்றுவிட்டதாகக் கூறினாராம். இதன் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மேலாளரான சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜன், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அறுந்த நிலையில் கேபிள் வயர்
அறுந்த நிலையில் கேபிள் வயர்

அந்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இளவரசு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். புகார் அளிக்கப்பட்டுள்ள செல்போன் டவர் ஏர்செல் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டது என்பதும், கடந்த  2018 வரை இயங்கிய ஏர்செல் நெட்வொர்க் அதற்குப் பிறகு தன் சேவைகளை நிறுத்திக் கொண்டதால், டவர் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.