Published:Updated:

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளையில் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி!

கொங்கு மண்டலத்திலிருக்கும் கொடுமணல் பகுதியிலும் ஏற்கெனவே அகழாய்வு நடந்திருக்கிறது. இங்கே, கி.மு.500 காலகட்டத்தைச் சேர்ந்த பொருள்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் வசித்த மக்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வு ( vikatan )

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய நான்கு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கீழடியில் 5 கட்டமாக அகழாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன்மூலம் தமிழர்களின் நாகரிகம், இந்தியாவிலேயே மிகவும் தொன்மையானது என்ற உண்மை வெளிவந்தது. இங்கு கிடைத்த மண்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்களின் குறியீடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துருக்களை வைத்துப்பார்க்கையில், கி.மு.600 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது.

அகழாய்வு
அகழாய்வு
vikatan

கொங்கு மண்டலத்திலிருக்கும் கொடுமணல் பகுதியிலும் ஏற்கெனவே அகழாய்வு நடந்திருக்கிறது. இங்கே, கி.மு.500 காலகட்டத்தைச் சேர்ந்த பொருள்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் வசித்த மக்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியில், நூறாண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அகழாய்வுப்பணிகள் நடந்திருக்கின்றன. தற்போது இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்துள்ளன.

அகழாய்வு
அகழாய்வு
vikatan

எனவே கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வுப்பணிகளைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் குறித்து மேலும் பல உண்மைகள் தெரியவரக்கூடும்.