Published:Updated:

``எல்லாவற்றுக்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது" - மதுரை எய்ம்ஸ் குறித்து எல்.முருகன் பதில்!

எல். முருகன்
News
எல். முருகன்

``எல்லாவற்றுக்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்தப் பணிகள் முடியும். இது பிரதமரே தொடங்கி வைத்த திட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்." - எல். முருகன்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``இந்தியாவிலேயே எந்த மாநிலத்துக்கும் இல்லாத பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இன்று ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் அற்பணித்துள்ளார்.

எல். முருகன்
எல். முருகன்

இதன் மூலம் 1,450 மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள். உலகில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கொள் காட்டி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என்பது அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் பணிகள் நடப்பதில்லை என்று சொல்கின்றனர். எல்லாவற்றுக்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்தப் பணிகள் முடியும்.

எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனை

இது பிரதமரே தொடங்கி வைத்த திட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை வரும். தமிழக மக்கள் அனைவரும் அங்கு சிறப்பான சிகிச்சை பெறுவார்கள். பொதிகை தொலைக்காட்சிக்கு தமிழ் தெரிந்த இயக்குநரை நியமிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

பொதிகை தொலைக்காட்சி
பொதிகை தொலைக்காட்சி

அது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தொலைக்காட்சி. விஜயன் என்பவர்தான் இயக்குநராக இருக்கிறார். அந்த குழுவில் 20 பேர் வரை இருப்பார்கள். அதில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.” என்று கூறினார்.