Published:Updated:

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழை

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
கனமழை

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மழை
மழை

நாளை தமிழ்நாடு மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 15-ம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரும் 16-17-ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமானது வரையான மழை பெய்யக்கூடும். 17-ம் தேதியன்று, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு
வானிலை ஆய்வு

வரும் 17-ம் தேதி, குமரிக்கடல் பகுதி, மன்னர் வளைகுடா, இலங்கை கடல் பகுதி, அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism